பொதுவாகவே சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நபர்களாக மாறிவிடுகின்றனர். சீரியலில் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கூட அவர்களை அடிக்கடி பார்ப்பதால் ரசிகர்கள் இந்த சீரியலில் இந்த கேரக்டரில் நடித்தவர் இவர் தானே என்று எளிதில் அடையாளம் காண்கின்றனர். திரைப்படங்களில் நடிக்கக் கூடிய நடிகர்களுக்கு கிடைக்கும் பிரபலத்தை விட சீரியல் பிரபலங்களுக்கு தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதன் காரணமாகவே பலரும் சின்ன திரையில் அறிமுகமாக விரும்புகிறார்கள்.
சின்னத்திரையில் அறிமுகமானாலும் வெள்ளித்திரையில் அமோகமாக பிரகாசம் இருக்கிறது என பலரும் புரிந்து கொண்டதால் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பல நடிகர்களும் நடிகைகளும் சென்றுள்ளனர். இதனிடையே சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் பலரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதால் தங்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அதன்படி ஜீ தமிழ் ஒளிபரப்பான கனா சீரியலில் தில்லி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் த்ரோஷினி.
அதனைப் போலவே விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியலிலும் மது கேரக்டரில் இவர் நடித்துக் கொண்டிருக்கின்றார். இப்படியான நிலையில் இவருக்கு நேற்று பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருடைய திருமண வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…