தமிழ் சின்னத்திரையில் தற்போது மிகவும் பிரபலமானவர் அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராஜலட்சுமி தான். ஆந்திர மாநிலம் தெனாலியில் பிறந்த இவர் தனது குழந்தை பருவத்திலேயே பல நாடகங்களில் நடித்துள்ளார். 1980 காலகட்டத்தில் சங்கராபரணம் என்ற தெலுங்கு படத்தில் சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் சங்கராபரணம் ராஜலட்சுமி என்று அறியப்பட்டார். சங்கராபரணத்தின் வெற்றிக்கு பிறகு என் டி ராமராவ், நாகேஸ்வர ராவ், ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா, மம்முட்டி மற்றும் விஷ்ணுவர்தன் உள்ளிட்ட இந்திய திரைப்படத் துறையின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு கதாநாயகியாக நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் மோகன் உள்ளிட்ட நடிகர்களுக்கும் ஜோடியாக இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்படி சுஜாதா, கோடீஸ்வரன் மகள், மூன்று முகம், அதிசய பிறவிகள், அர்ச்சனை பூக்கள், கருடா சௌக்கியமா, இமைகள், நாணயம் இல்லா நாணயம் மற்றும் தேன்கூடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 1990கள் வரை தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர். அதன் பிறகு 1990 ஆம் ஆண்டில் கே ஆர் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு நடிப்பதிலிருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார்.
திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் செட்டில் ஆன இவர் மீண்டும் இந்தியா வந்து தனது நடிப்பை தொடர்ந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2003 ஆம் ஆண்டு பரசுராம், பிரியசகி, திருப்பாச்சியில் விஜயின் அம்மா, வரலாறு படத்தில் அஜித்தின் அம்மா, திருப்பதி மற்றும் யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு அம்மா ரோலில் நடித்தார். இதுவரை தமிழ் மற்றும் மலையாளம் என பழமொழிகளில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சின்னத்திரையையும் இவர் விடுவதாக இல்லை.
1991 ஆம் ஆண்டு துர்தர்ஷனில் வெளியான பெண் என்ற தொடரில் நடித்திருந்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மேகலா மற்றும் பிள்ளை நிலா உள்ளிட்ட சீரியல்களில் நடித்த இவர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் நீங்காத இடம் பிடித்தார். தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வந்த இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மாமியார் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். எண்பதுகளில் ஹீரோயினியாக தொடங்கிய இவருடைய திரை பயணம் தற்போது சீரியலில் பாட்டியாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…