அதிரும் அரசியல்..! திராவிடக் கட்சிகளின் ரகசிய உடன்பாடு..? விஜய்யை வீழ்த்த கைகோர்க்கும் திமுக – அதிமுக..!!

Spread the love

அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதே நேரத்தில், தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியும் தற்போது காலியாகியுள்ளது. இந்த ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளும் தங்களுக்குள் மோதிக்கொள்ளக் கூடாது என்ற ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த உடன்பாட்டின்படி, முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட திமுக ஆர்வம் காட்டி வருகிறது. அதே வேளையில், கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தாமல், அங்கு அதிமுகவிற்கு ஆதரவாகச் செயல்பட திமுக தலைமை விரும்புவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த மறைமுகப் புரிதல் தவெகவிற்கு எதிரான வியூகமாக இருக்கலாம் எனக் கருதப்படுவதால், தமிழக அரசியலில் இந்த இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“எல்லாம் போச்சு”… சொந்த மகள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை…. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்….!

தமிழ்நாடு இந்தியாவிலேயே முற்போக்கான மற்றும் சமூக சீர்திருத்தங்கள் நிறைந்த ஒரு மாநிலமாகத் திகழ்ந்தபோதிலும், காதல் திருமணங்களுக்கு எதிரான சமூகக் கெடுபிடிகளும்…

1 minute ago

“சென்னையில் பயங்கரம்: ரேபிடோ பைக்கில் அலுவலகம் சென்ற ஐடி பெண் ஊழியர்.. கார் மோதி பலி…!”

சமீபகாலமாகவே சாலைகளில் வாகனங்களின் வேகம் அதிகரித்து, விபத்துக்களும் தொடர்கதையாகி வருகின்றன. பைக் மற்றும் கார்களில் செல்பவர்கள் போதிய நிதானமின்றி, அதீத…

4 minutes ago

“வாக்குறுதி கொடுத்தா மட்டும் போதாது மிஸ்டர் விஜய்”… மக்கள் செம கடுப்பில் இருக்காங்க…. விருத்தாசலத்தில் களமிறங்கி ஷாக் கொடுத்த பிரேமலதா….!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்தான விமர்சனங்கள்…

5 minutes ago

அனைத்து பள்ளிகளுக்கும்.. TN பொதுத்தேர்வில் இனி ‘இது’ கட்டாயம்…. தமிழக அரசு உத்தரவு…!

தமிழகத்தில் வரும் 2026-27 கல்வியாண்டில் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும்…

17 minutes ago

“பரந்தூருக்கு ‘நோ’.. டேட்டா சென்டருக்கு ‘எஸ்’….. விஜய் அரசின் முதல் MoU… பின்னணியில் இருக்கும் யாரும் சொல்லாத கசப்பான உண்மை…!

தமிழக முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே எல்&டி நிறுவனத்துடன் கையெழுத்தான 18,600 கோடி ரூபாய் மெகா முதலீட்டு…

19 minutes ago