திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த இருளஞ்சேரி கிராமம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த இளையராஜா(30) என்பவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி சாந்தி (20). இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இளையராஜாவின் தம்பி இசை மேகத்துக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது அவருடைய மனைவி கர்ப்பமாக உள்ளார். இதனிடையே அண்ணி சாந்தி இசை மேகத்தின் மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மனைவி கர்ப்பமாக இருப்பதை அண்ணி சாந்தி கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இசை மேகம் சாந்தியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சாந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ள இசை மேகத்தை தேடி வரும் நிலையில் அண்ணியை கொழுந்தன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…