தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிவாகை சூட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அதற்காக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார். இபிஎஸ்க்கு போட்டியாக அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையனும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் திமுகவிற்கு எதிராக ஒருமித்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்று இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சியை கூட்டணிக்கு வர வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைத்தது பாஜகவின் கருத்து என்ற அவர், திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்களுடன் வரலாம் என்று கூறியுள்ளார். NDA கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ்ஐ இணைப்பது குறித்து நாளை பியூஸ் கோயல் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இபிஎஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…