பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜோசப் விஜய் அவருடைய கட்சியான தமிழக வெற்றிக்கலகம் கொங்கு மண்டலத்திலே ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தி திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும்தான் போட்டி என்ற ஒரு நேரடி பிம்பத்தை வெளிப்படுத்த முயற்சித்து ஈரோட்டில் பொதுக் கூட்டத்தை நடத்தியுள்ளது. ஆனால் அந்தக் கூட்டம் படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்த கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடிய 70 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் டெபாசிட் இழக்கும். இதுதான் இங்கு இருக்கக்கூடிய நிலைமை.
விஜயை பார்ப்பதற்காகத்தான் கூட்டம் கூடியது. தமிழக வெற்றி கழகம் கட்சியை பொறுத்தவரை இன்னொரு மக்கள் நீதி மையமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய மாநாடு, விஜய் பேசிய பேச்சு, திமுக தீய சக்தி என்று பேசியது அனைத்தும் திமுக எழுதிக் கொடுத்தது தான். திமுகவின் டூல் கிட்டாகத்தான் விஜய் அங்கு செயல்பட்டு கொண்டிருக்கிறார். திமுக ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நடிகரை வைத்து ஒரு கட்சி ஆரம்பிக்கும்.
அதிமுகவின் வெற்றியை சீர்குலைக்கவும் வாக்குகளை பிரிக்கவும் திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும் என்பதற்காக இத்தகைய ஒரு ஸ்டேட்டர்ஜி வைத்து சில கிறிஸ்துவ நிறுவனங்களுடன் இணைந்து இன்று ஜோசப் விஜய் மற்றொரு மக்கள் நீதி மையமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றார். சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு விஜய் மீண்டும் திமுகவுக்கு சென்று விடுவார். அவர் மிக நல்ல உதாரணம் எல்லோருக்கும் தெரிந்த உதாரணம். அவருடைய ஜனநாயகம் படம் திமுக நிறுவனம் தான் சாட்டிலைட். திமுக எதிர்ப்பு விஜய் தீய சக்தி என்று வெளியே நாடகத்தை நடத்தி பேசி கொள்கிறார்கள். ஆனால் இருவருக்கும் உள்ளே ஒரு புரிதலும் அன்பும் இருக்கின்றது. அந்த இரட்டை வேடத்தை இந்த கொங்கு பகுதியில் ஒரு தொகுதியில் கூட தமிழக வெற்றிக்கழகம் விஜய் ஓட்டு வாங்க முடியாது என்று அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…