Categories: சினிமா

டிஆர்பியில் டாப் லிஸ்டில் இருக்கும் “சிறகடிக்க ஆசை சீரியல்”.. நடிகர், நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாகவே தொலைக்காட்சி தொடர்கள் என்றால் பெரியவர்களுக்கு தான் பிடிக்கும் என்ற ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் அதனை உடைத்து சிறகடிக்க ஆசை சீரியல் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து வருகிறது. எஸ். குமரன் இயக்கும் இந்த சீரியல் விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஹீரோவாக வெற்றி வசந்தும் ஹீரோயினியாக கோமதிப்பிரியாவும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் கதைப்படி பூக்கடையில் வேலை பார்த்த மீனாவை குடிகாரனான முத்து காதலித்த திருமணம் செய்து கொள்வார்.

திருமணத்திற்குப் பிறகு முத்துவை திருத்தி மீனா ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவார். இதனிடையே இவர்கள் இருவரும் கூட்டு குடும்பத்தில் சந்திக்கும் பிரச்சனைகளும் சவால்களும் நிறைந்தது தான் சிறகடிக்க ஆசை சீரியலின் கதை. ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து வரும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சம்பளமும் வாரி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த சீரியலில் அதிக சம்பளம் வாங்குவது முத்து மற்றும் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா தான். இவர்கள் இருவருமே ஒரு எபிசோடுக்கு தலா 12000 ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர்.

அடுத்ததாக முத்துவின் அம்மா மற்றும் அப்பாவாக நடிக்கும் சுந்தர்ராஜன் மற்றும் அனிலா விஜயகுமார் ஆகியோர் ஒரு எபிசோடுக்கு தலா 8000 ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். இவர்களைத் தொடர்ந்து மனோஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவா ஒரு எபிசோடுக்கு 6 ஆயிரம் ரூபாய், ரோகினியாக நடிக்கும் நடிகை சல்மா அருண் 6000 ரூபாயும் சம்பளம் வாங்குகின்றனர். முத்துவின் இளைய சகோதரர் ரவியாக நடிக்கும் யோகேஷ் மற்றும் அவரின் மனைவியாக ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் ஒரு எபிசோடுக்கு தலா 5000 சம்பளமாக வாங்குகின்றனர். விஜய் டிவியை பொறுத்தவரையில் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கு தான் அதிக சம்பளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

4 minutes ago

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்… இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்… ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்… மத்திய அரசின் அதிரடி அப்டேட்…!!

மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…

5 minutes ago

கணவனே எமன்…. அன்னூர் கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்…. 4 நாளில் வெளியான பகீர் உண்மை….!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…

8 minutes ago

எல்பிஜி சிலிண்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி… ஜூன் 30-க்குப் பிறகு கனெக்ஷன் கட்…? மத்திய அரசின் நியூ அப்டேட்…!!

இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…

11 minutes ago

காலையிலேயே பரபரப்பு… இனி தவெக-வும் இல்ல, அதிமுக-வும் இல்ல…. சி.விஜயபாஸ்கரின் ‘ஸ்கெட்ச்’… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…

13 minutes ago

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

16 minutes ago