Connect with us

CINEMA

“என் வாழ்க்கையில் அவர் செய்த அந்த விஷியத்தை மறக்கவே முடியாது”.. விஜயகாந்த் குறித்து சிவாஜி கணேசன் மூத்த மகன் ராம்குமார் உருக்கம்.

நடிகர் சிவாஜிகணேசன் தமிழ் சினிமாவின் முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்தவர். எம்ஜிஆர், சிவாஜியும்தான் கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருந்தனர். தாதா சாகிப் பால்கே, செவாலியே போன்ற உலகின் மிகச்சிறந்த விருதுகளை எல்லாம் சிவாஜி என்ற நடிப்பு கலைஞனுக்கு கொண்டு பெருமை தேடிக்கொண்டது அவரது காலமாக இருந்தது. அப்படிப்பட்ட புகழுடன் வாழ்ந்த சிவாஜிகணேசன் மறைந்த போது, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்த அவரது ர்சிகர்கள், அவர் வாழ்ந்த இடம் தி.நகர் நோக்கி சென்றது. கடைசி முறையாக அவரது முகத்தை காண வேண்டும் என ரசிகர்கள் கூட்டம் அங்கு திரண்டதால் கட்டுக்கடங்காமல் போனது.

   

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிறமொழி கலைஞர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தனர். வெளிநாடுகளில் இருந்தும் சிவாஜி ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அங்கு ஏற்பட்ட கூட்டம் கட்டுங்கடங்காமல் போனது. சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபுவும் தந்தை மறைந்த சோகத்தில் தவித்து நின்றனர்.

துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த தனியாளாய் களம் இறங்கியவர் விஜயகாந்த். அங்கிருந்தவர்களை எல்லாம் துரத்தி துரத்தி விரட்டி, கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினார். அதே போல், சிவாஜியின் இறுதி ஊர்வலத்திலும் அதே போல் கூட்டம் திரண்ட போதும், கையில் துண்டு எடுத்து சுற்றி, விரட்டி சிவாஜியை பாதுகாத்து அந்த இறுதி ஊர்வலத்தை நடத்தி முடித்தவர் விஜயகாந்த்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார், மறக்க முடியாத ஒரே ஒரு விஷயம், அப்பா இறுதி ஊர்வலத்தின் போது பக்கபலமாய் நின்று அதை சரியாக முடித்துக்கொடுத்தவர் விஜயகாந்த். சிவாஜி இறந்த அன்றும், அவரது இறுதி ஊர்வலத்திலும் எனக்கும், பிரபுவுக்குமான ரெஸ்பான்ஸ்பிலிட்டியை விஜயகாந்த் எடுத்துக்கொண்டு, அந்த மிகப்பெரிய உதவியை செய்தார். என் வாழ்க்கையில் அந்த ஒரு விஷயம், அந்த ஜூலை 21, ஜூலை 23 ஆகிய அந்த இரண்டு நாட்கள் அவருடன் இருந்தது, எங்களால் மறக்க முடியாதது. அதற்கு இப்போதும் விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி என்று சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top