தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவுலகில் நடிகை ஷகிலா, கடந்த 1990களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர். இரவு நேரங்களில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர். சில்க்ஸ் ஸ்மிதாவுக்கு அடுத்தப்படியாக, கவர்ச்சியில் எல்லை தாண்டி ரசிகர்களை குஷிப்படுத்தியவர் ஷகிலா தான். சமீபத்தில் நடிகை ஜோதிமீனா மற்றும் ஷகிலா ஆகியோர் சந்தித்து பேசிக்கொண்டு, ஒருவருக்கு ஒருவர் தங்களது திரையுலக அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டனர்.
அப்போது நடிகை ஷகிலா கூறியதாவது, விஜய் நடிக்க வந்த ஆரம்ப காலக்கட்டத்தில், விஜயுடன் சில பாடல்களுக்கு நான் நடனமாடி இருக்கிறேன். அதன்பிறகு அவர் பெரிய நடிகரான பிறகு, அழகிய தமிழ் மகன் படத்தில் அவருடன் நடிக்க அழைத்தனர். விஜய், யாருடனும் அதிகமாக பேச மாட்டார் என பலரும் கூறியிருந்ததால்,
ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னிடமும் அப்படி நடந்துக்கொண்டால் என்ன செய்வது, அது நல்ல பழக்கவழக்கத்துக்கு நன்றாக இருக்காதே, அது என்னை அவமதிப்பதாக இருக்குமே என்று எனக்கு தோன்றியது. அதனால், அந்த படத்தில் நடிக்கும் போது நானும் விஜயும் சேர்ந்து நடிப்பது போன்ற காட்சி இருந்தால் நடிக்க மாட்டேன் என்றேன். அப்படி காட்சியே இல்லை என்று அழைத்தனர்.
ஆனால் பென்னி காம்பவுண்டில் இரவு 1.30 மணிக்கு ஷூட்டிங் நடந்தது. அந்த ஸ்பாட்டில், நான் நடிக்கும் முதல் ஷாட்டிலேயே விஜய், சந்தானம், அவரது நண்பர்களுடன் நான் நடிக்கும் காட்சியை படமாக்கினர். சற்று தூரத்தில் இருந்து என்னை பார்த்தவுடன் நடிகர் விஜய், ஹாய் ஷகீ என சத்தமாக என்னை அழைத்தார். மொத்த யூனிட்டும் ஷாக் ஆகி திரும்பி பார்த்தது. எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. அருகில் அழைத்து மெதுவாக பேசியிருக்கலாம். இப்படி பேசிவிட்டாரே என ஆச்சரியமாக இருந்தது.
ஏற்கனவே படங்களில் அவருடன் நடித்த பழைய நட்பை மறக்காமல் விஜய் பேசியது சந்தோஷமாக இருந்தது. பிறகு அந்த காட்சியில், சந்தானம் என்னை பற்றி கிண்டலாக டயலாக் பேசிய போது, என் காலை பெரிய கொசு ஒன்று கடித்தது. சட்டென கொசு கடித்த இடத்தை பார்க்க காலுக்கு கீழே நான் குனிய, அவர்கள் அங்கிருந்து தெறித்து ஓடிப் போய்விட்டனர். பின்னர் கேட்டபோது, நான் காலில் இருக்கிற செருப்பை கழட்டுவதாக நினைத்து பயந்து ஓடிவிட்டதாக பிறகு, சந்தானம் கூறினார் என, சிரித்தபடி தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஷகிலா.