Connect with us

CINEMA

கணவருடன் பயங்கர விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.. இரண்டு பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ரசிகிரகள்..

ஸ்வேட்ஸ் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தவர் காயத்ரி ஜோஷி. இவரது சொந்த ஊர் நாக்பூர். கடந்த 2000-ஆம் ஆண்டு ஜோஷி பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். மேலும் மிஸ் இன்டர்நேஷனல் போட்டியிலும் இந்தியா சார்பாக பங்கேற்றார். அவர் மாடலிங் செய்வதையும் விளம்பரங்களிலும் ஜோஷி நடித்துள்ளார். இதனால் அவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

   

அதன்படி அஷிதோஷ் கௌரிகர் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ஸ்வேட்ஸ் படத்தின் மூலம் ஜோஷி அறிமுகமானார். இவருக்கு சாருக்கான் ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தை பார்த்த பலரும் ஜோஷிக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக கூறினர். ஆனால் கடந்த 2005ஆம் ஆண்டு ஜோஷி தொழிலதிபரான விகாஸ் ஓபரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். காயத்திற்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் இத்தாலி சென்றபோது கார் விபத்தில் சிக்கினர். இத்தாலி நாட்டின் சார்டினியாவில் சென்று கொண்டிருந்தபோது லம்போர்கினி பெராரி போன்ற உயர் ரக கார்கள் ஒரே நேரத்தில் கேம்பர் வேனை முந்தி செல்ல முற்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக காரர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மெலிசா க்ராட்லி, மார்கஸ் க்ராட்லி என்ற சுவிட்சர்லாந்தை சேர்ந்த வயதான தம்பதியினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நானும் விகாஸும் இத்தாலியில் இருக்கிறோம். கடுமையான விபத்தை சந்தித்து கடவுள் அருளினால் இருவரும் நலமாக இருக்கிறோம் என சோசியல் மீடியாவில் கூறியுள்ளார்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top