நைட் 11 மணிக்கு அவன் கூட இன்னும் பேசிட்டு தான் இருக்கேன்.. மறைந்த தனது கணவர் பற்றி பேசும் போது பகிர் கிளப்பிய சீரியல் நடிகை சுருதி..

By Mahalakshmi

Published on:

சீரியல் நடிகை சுருதி ஷண்முக பிரியா,  இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலிலும் இவர் நடித்துள்ளார். அதன்பின்பு தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில்  சிறு கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

   

இவர் 2022 ல் மிஸ்டர் தமிழ்நாடு சாம்பியன்ஷிப் வென்ற பாடிபில்டர் அரவிந்த் சேகரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தின் மூலம் சீரியல் நடிகை ஸ்ருதி மேலும் பிரபலமடைந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக ஆகஸ்ட் 2023 ம் ஆண்டு சுருதியின் கணவர் பாடி பில்டர் அரவிந்த் சேகர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதற்கு சுருதியின்  ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வந்துள்ளனர்.

தற்போது சீரியல் நடிகை சுருதி பேட்டி ஒன்றில்  கணவர் அரவிந்த்  என் கூட கடைசி வரைக்கும் என்னோடு தான் இருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் தனக்கு வாழ்வில் ஏதாவது ஒரு இன்னல்கள் ஏற்பட்டாலும் ஏதாவது பிரச்சனைகள்  ஏற்பட்டாலும் அவரின் புகைப்படத்தை 11. 11 மணியளவில் தினமும் பார்த்து எனது மனதில் உள்ள குழப்பங்களையும் கேள்விகளையும் அவரிடம் கூறுவேன் என்றார்.

மேலும், ஏதாவது ஒரு வழி  மூலமாக அதாவது நீங்களோ அவரின் நண்பர்களோ யாராவது என்னை தொடர்பு கொண்டு நான் அவரிடம் கூறிய பிரச்சினைகளுக்கு சொல்யூஷன் கொடுப்பது போல  யாராவது என்னிடம் பேசுவார்கள். அவருடன் இப்போது வரை நான் கம்யூனிகேஷன்ல  தான் இருக்கிறேன் என்று சீரியல் நடிகை சுருதி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ssmusic (@ssmusicofficial)

author avatar
Mahalakshmi