தமிழில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் செந்தில்குமாரி. பசங்க திரைப்படத்தில் அன்பான அம்மாவாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் மெர்சல் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கொள்ளை கொண்ட இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் விஜய் டிவி முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா சீரியலிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது 40 வயதுக்கு மேலாகும் இவர் சீரியல் மற்றும் படங்களில் அம்மா கதாபாத்திரம் மற்றும் மாமியாராக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், இன்று மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் அவர் ‘3 நாளைக்கு முன்பு இந்த வீடியோவை ஷூட் செய்ததாகவும், வாழ்க்கை மிகவும் நிச்சயமற்றது. இவ்வளவு உற்சாகமான நபரை நாங்கள் தவறவிட்டு விட்டோம் என்றும், Rip sir’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ….
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…