நடிகர் ,நடிகைகள் தங்களுக்குள் காதலித்து திருமணம் செய்து கொள்வதை தற்பொழுது வழக்கமாகி விட்டது. இது வெள்ளித்திரையில் தொடங்கி சின்னத்திரை வரை நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கு உதாரணமாக நாம் பலரை கூறலாம். அவர்களில் மெட்டி ஒலி சேத்தன் – பிரியதர்ஷினி, சரவணன் மீனாட்சி செந்தில் – ஸ்ரீஜா, ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் – ஆலியா மானசா என பலர் உள்ளனர்.
ஆனால் இப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே அழகான புரிதலுடன் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர். தற்பொழுது இவர்களின் வரிசையில் சீரியல் நடிகை ஜனனியும் இணைந்துள்ளார். இவர் யூடியூப் பிரபலமான இனியன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜனனி பிரதீப். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் காதலித்த வந்த இனியன் மற்றும் ஜனனி தற்பொழுது திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.
அவர்களது திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர் தற்பொழுது இனியன் – ஜனனி பிரதீப் ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…