#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனுஷ் அவரே இயக்கி நடித்த ராயன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. படம் குறித்த கலவையான விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வலம் வருகிறது. இந்த நிலையில் செய்யாறு பாலு ராயன் படம் பற்றி கூறியதாவது, சிறுவயதிலேயே அம்மா அப்பாவை இழந்த தனுஷ் அண்ணன் தம்பியோடு தங்கையோடு வாழ்ந்து வருகிறார். தங்கை பிறந்த உடனே பெற்றோர் இறந்து விடுகின்றனர். இதனால் பிழைப்பு தேடி தம்பிகள் மற்றும் தங்கையுடன் தனுஷ் சென்னைக்கு வருகிறார்.
அவர்களது குடும்பம் இரண்டு கேங்ஸர்களுக்கு இடையில் சிக்கிக் கொள்கிறது. கதையாக கேட்கும் போது நன்றாக இருக்கிறது. ஆனால் இயக்குனராக தனுஷ் எதையோ கோட்டை விட்டதாக தான் தெரிகிறது. இந்த படத்தில் ஒரு வில்லன் பருத்திவீரன் படத்தில் நடித்த சரவணன், மற்றொரு வில்லன் எஸ்.ஜே சூர்யா. இரண்டு பேரும் வில்லனாக நடித்துள்ளனர். இரண்டு கேங்ஸ்டரையும் பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். முதல் பாதியில் கேங்ஸ்டருக்கும் தனுஷுக்கும் இடையே ஏதோ பிரச்சனை இருப்பது போல கதை நகர்கிறது.
இரண்டாம் பகுதி முழுவதும் அடி உதை, ரத்தம், குத்து சண்டை என செல்கிறது. ராயன் படத்தில் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்கள் வில்லனாக இருக்கின்றனர். ஆனால் அவர்களது கதாபாத்திரம் பற்றி அழுத்தமாக சொல்லவில்லை. படத்தை பார்க்கும் போதே அடுத்து இதுதான் நடக்கப்போகிறது என யூகிக்க முடிகிறது. அது படத்தின் மைனஸ் ஆக அமைந்தது. ராயன் படத்தை பார்த்தால் ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை படத்தின் கதை நியாபகம் வருகிறது.
அதன் பிறகு ட்ராக் மாறி துரோகம், துரோகத்தால் நடக்கும் கொலைகள், அந்த கொலைக்கான காரணத்தை தனுஷ் தெளிவாக சொல்லவில்லை. அதை கரெக்டாக சொல்லி இருந்தால் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கும். முக்கியமாக படத்தை ஏ.ஆர் ரகுமான் தான் தனது தோளில் சுமந்து இருக்கிறார். படத்தில் உசுரே நீ என்ற பாடல் அருமையாக இருக்கிறது. ஒரு மிகப்பெரிய பலமாக ஏ.ஆர் ரகுமானின் இசை அமைந்துள்ளது. தனுசுக்காக ராயன் படத்தை ஒரு முறை பார்க்கலாம் என செய்யாறு பாலு வீடியோவில் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…
நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென தீ…
தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல்…
கர்நாடக மாநிலம் மைசூருவில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட ஒரு நூதன முயற்சி தற்போது…