வெட்கமே இல்லையா? கண்ணாடியைப் பார்த்தாவது திருந்துங்க.. மைசூரு மாநகராட்சியின் நூதன முயற்சியை மதிக்காத நபர்… வைரலாகும் பகீர் வீடியோ..!!

Spread the love

கர்நாடக மாநிலம் மைசூருவில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட ஒரு நூதன முயற்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது. மைசூரு புறநகர் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள சுமார் 80 மீட்டர் நீளமுள்ள காலிச் சுவரில், ரூ. 9.5 லட்சம் செலவில் எல்.இ.டி விளக்குகளுடன் கூடிய துருப்பிடிக்காத இரும்புப் பலகைகள் கண்ணாடிகளைப் போல பொருத்தப்பட்டுள்ளன. அங்கு சிறுநீர் கழிக்க முயல்பவர்கள் தங்கள் உருவத்தையே தாங்கள் பார்ப்பதன் மூலம் ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தி, அந்தப் பழக்கத்தைக் குறைக்கலாம் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இருப்பினும், இந்த வசதி ஏற்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே, நபர் ஒருவர் அந்தக் கண்ணாடிகளுக்கு முன்பாகவே சிறுநீர் கழித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் கண்ணாடியின் முன் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை நேரில் தட்டிக் கேட்டு கண்டித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ குறித்து இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு இல்லாததே இதுபோன்ற செயல்களுக்குக் காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். அதே வேளையில், வெறும் தண்டனைகளை மட்டும் வழங்காமல், போதிய அளவில் பொதுக் கழிப்பிட வசதிகளை மேம்படுத்துவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Swetha

Recent Posts

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

9 minutes ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

27 minutes ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

36 minutes ago

பகீர்.! வானில் பற்றிய தீ… தரை இறங்கியபோது நேர்ந்த கோர விபத்து!” – 277 பயணிகளுடன் வந்த துர்க்கி ஏர்லைன்ஸ் விமானத்திற்கு நேர்ந்த கதி..!

நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென தீ…

44 minutes ago

BIG BREAKING: போட்டியின்றி சபாநாயகராக தேர்வானார் ஜே.சி.டி. பிரபாகர்..!!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல்…

53 minutes ago

“விபத்தா? அல்லது சினிமா படப்பிடிப்பா?”… சிக்னல் கம்பத்தின் உச்சியில் மோட்டார் சைக்கிள்… மரணத்தை முத்தமிட்டு மீண்ட ஓட்டுநர்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே டெல்டா எல்லையில் நிகழ்ந்த ஒரு விசித்திரமான சாலை விபத்து, பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.…

1 மணத்தியாலம் ago