#image_title
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் மாதவன் நடித்துள்ளார். சினிமாவில் சிறிய பிரேக் எடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஹிந்தியில் தனு வெட்ஸ் மனு திரைப்படத்தில் நடித்து மீண்டும் கம்பேக் கொடுத்தார். தமிழில் கடந்த 2016-ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் ரிலீசான இறுதி சுற்று, விக்ரம் வேதா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
மேலும் ராக்கெட்ரி படத்தை இயக்கி சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் தட்டி சென்றார் மாதவன். சமீபத்தில் மாதவன் நடித்த சைத்தான் படத்திற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இப்போது டெஸ்ட் திரைப்படத்தில் மாதவன் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் நயன்தாரா, சித்தார்த் ஆகியோரும் நடிக்கின்றனர். அடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் அதிர்ஷ்டசாலி படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் மாதவன் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் 17.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்கி உள்ளார். சுமார் 4200 சதுர அடியில் அமைந்துள்ள அந்த அப்பார்ட்மெண்டில் சகல சொகுசு வசதிகளும் உள்ளது. கடந்த 22-ஆம் தேதி 1.5 கோடி ஸ்டாம்ப் கட்டணத்துடன் 30000 பதிவு கட்டணமும் செலுத்தி மாதவன் வீட்டை வாங்கியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…