2026 ஆம் ஆண்டின் கடைசி சனி மற்றும் புதன் சேர்க்கை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இதனால் சில ராசிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட உள்ளது. ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படி நகரும் நேரத்தில் அவை மற்றொரு கிரகத்துடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டிய சூழல் இருக்கும். அதன்படி கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிற்பகல் 12.43 மணியளவில் சனி மற்றும் புதன் இருவரும் இணைந்து கேந்திர சஷ்டி யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ராஜயோகம் குறிப்பிட்ட சில ராசிகளை புத்தாண்டில் சிறப்படைய செய்யும். ஏனெனில் இது 2025 ஆம் ஆண்டின் கடைசி ராஜ யோகமாகும்.
மிதுனம்:
சனி மற்றும் புதன் பகவானின் சேர்க்கை மிதுன ராசிகளுக்கு நல்ல பலனை தரும். புதன் பகவான் தொழிற் ஸ்தானமான பத்தாவது வீட்டிலும் சனிபகவான் சுக ஸ்தலமான நான்காவது வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். இந்த காலகட்டம் உங்களுக்கு தொழிலிலும் பணத்திலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். நிதி சார்ந்த முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். உங்களுடைய எந்த சேவைக்கான திட்டமிடலும் வெற்றியில் முடிவடையும். உடன் பிறந்தவர்களோடு இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும். பொருளாதாரம் மூலமாக வெற்றி காண்பீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதன் பகவானின் செயற்கை நிதி ரீதியான நன்மைகளை வழங்கும். வேலையில் பொறுப்புகள் அதிகரித்தாலும் அது உங்களுக்கு நேர்மறையான பலனை வழங்கும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த முயற்சியின் நன்மை தரும். குடும்பத்தின் அளவில்லாத மகிழ்ச்சியும் ஆனந்தமும் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய மன அழுத்தம் குறைந்து மனம் மகிழ்ச்சியாக மாறும்.
தனுசு:
தனுசு ராசியில் புதன் பகவான் லக்ன ஸ்தானத்திலும், சனி பகவான் நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வருமானத்தை திறக்க புதிய வழிகள் பிறக்கும். முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். உங்களுடைய கடின உழைப்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்கால திட்டங்கள் வலுவடையும். பதவி உயர்வு மற்றும் பதவி மாற்றமும் நடைபெறும்.
மீனம்:
சனி மற்றும் புதன் சேர்க்கை இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை தரப்போகின்றது. சனிபகவான் லக்ன ஸ்தானத்திலும் புதன் பகவான் தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கின்றனர். எனவே இந்த காலகட்டத்தில் புதிய வீடு கட்டுதல் மற்றும் பழைய வீட்டை பராமரித்தல், நிலம் வாங்குதல் போன்ற உங்கள் கனவுகள் அனைத்தும் நினைவாகும். உங்களுடைய வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…