Connect with us

CINEMA

பருத்திவீரன் படத்த பாத்தா தற்கொலை பண்ணிப்பாங்க.. இதுபோல படம்லாம் வரவே கூடாது.. அமீரை வம்புக்கு இழுத்த பிரபல இயக்குனர்..

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே நீடிக்கும் மோதல் போக்கானது தற்போது தனிந்து இருக்கக் கூடிய நிலையில், மீண்டும் அமீர் குறித்தும் அவரது முதல் படமான பருத்திவீரன் குறித்தும் பாலிவுட் இயக்குநர் தெரிவித்து இருக்கக் கூடிய சர்ச்சைக் கருத்தானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் இயக்குநர் சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கத்தில், ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடிப்பில் கடந்த 1-ம் தேதி வெளியான திரைப்படம் அனிமல்.

#image_title

   

பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் படத்தில் நிறைய வைலன்ஸ் காட்சிகள் இடம் பெற்று இருப்பதால் கலவையான விமர்சனங்களையும் படம் பெற்றது. ஓடிடியில் கூடுதலாக 8 நிமிடங்கள் அதிகமாக இப்படம் வெளியானது. இப்படம் மொத்தமாக பாக்ஸ் ஆபிஸில் 900 கோடி ரூபாயை வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில் இப்படத்தை பார்த்த இயக்குநர் மற்றும் நடிகர் அமீர், இப்படம் குறித்து ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

#image_title

ஆனால் அப்படத்தை பற்றி கூற வேண்டும் என்பதற்காக அல்லாமல் தமிழ் படங்களுக்கு எப்படி சென்சார் போர்டு செயல்படுகிறது என்பதற்கு அனிமல் படத்தை ஒப்பிட்டு சில உதாரணங்களை கூறியிருந்தார். தான் பார்த்த படங்களிலேயே வன்முறை நிறைந்த காட்சிகள் இடம்பெற்றுள்ள படம் அனிமல் என்றும், இது போன்றதொரு படத்தை தமிழில் வெளியிட சென்சார் போர்டு ஒத்துக் கொள்ளாது என கூறியிருந்தார்.

#image_title

இந்த நிலையில் இது குறித்து அனிமல் பட இயக்குநர் சந்தீப் வெங்காவிடம் ஒரு நேர்காணலில் கேள்வி எழுப்பியதற்கு, அவர் சென்சார் போர்டு குறித்து பதிலளிக்காமல், அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் குறித்து கருத்து தெரிவித்தார். அதாவது அப்படத்தை பார்த்தவர்கள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் எனவும், அதிலும் பல வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்ததாகவும் கூறியிருக்கிறார். ஏற்கனவே பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு சற்று தணிந்துள்ள நிலையில், அனிமல் பட இயக்குநர் சந்தீப் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top