“தமிழ் கூட தெரியாத மனைவி.. துடிதுடித்த 2 குழந்தைகள்”… தவெக கூட்டத்தில் பலியான இளைஞர்… அண்டை வீட்டாரின் பகீர் வாக்குமூலம்..!

Spread the love

சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத் தொழிலாளி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் பங்கேற்ற இந்த பிரம்மாண்டக் கூட்டத்தைக் காணச் சென்ற சூரஜ் என்ற அந்த இளைஞர், வெயிலின் தாக்கம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்ததாகத் தெரிகிறது.

உயிரிழந்த சூரஜின் குணநலன்கள் குறித்து அவரது அண்டை வீட்டார் கண்ணீர் மல்கப் பகிர்ந்துள்ளனர். அவர் தனது குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்றும், குறிப்பாகத் தமிழ் தெரியாத தனது மனைவியை மிகவும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டவர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு மகனைப் போல அனைவரிடமும் சகஜமாகப் பழகக்கூடிய அவரை இழந்தது தங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என அப்பகுதிப் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று காலை கூட சூரஜ் மிகவும் உற்சாகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தனது முதலாளி வழங்கிய டோக்கன் மூலம் கூட்டத்திற்குச் செல்வதாகவும், குடும்பத்திற்குத் தேவையான ரேஷன் பொருட்கள் மற்றும் பண விவகாரங்கள் குறித்தும் அவர் அண்டை வீட்டாரிடம் பேசியுள்ளார். ஆனால், சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்த செய்தி கேட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது சூரஜின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆதரவின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊர் விட்டு ஊர் வந்து பிழைப்புத் தேடிய இடத்தில், குடும்பத் தலைவனை இழந்து அனாதையாக நிற்கும் அந்தப் பெண்ணிற்குத் தேவையான உதவிகளை அரசு அல்லது தவெக கட்சித் தலைமை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் தவெக கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோக அலைகளை உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

40 minutes ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

44 minutes ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

45 minutes ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

47 minutes ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

51 minutes ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

55 minutes ago