இயக்குனர் ஆர்.கே செல்வமணி மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு விஜயகாந்த் வைத்து புலன் விசாரணை படத்தை இயக்கி இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கேப்டன் பிரபாகரன், பொன்விலங்கு, செம்பருத்தி, கண்மணி, ராஜ முத்திரை உள்ளிட்ட படங்களை எழுதி இயக்கினார். கடந்த 22 ஆம் ஆண்டு நடிகை ரோஜாவை ஆர்.கே செல்வமணி திருமணம் செய்து கொண்டார். இவர் விஜயகாந்தை வைத்து “கேப்டன் பிரபாகரன்”, “புலன் விசாரணை” படங்களை எடுத்தார். இவ்விரண்டும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஆர்.கே செல்வமணி, “புலன் விசாரணை பட சூட்டிங் பொழுது மேக்கப் விஜயகாந்த் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார் .அப்பொழுது அழுகை சத்தம் கேட்டு இருக்கிறது விஜயுயகாந்த் சாருக்கு. அங்கு காஸ்டியூம் அசிஸ்டென்ட் அழுறான். ஏன்டா அழுகிறாய் என்று கேட்ட பொழுது பிரம்மாண்டமான செட் அண்ணே… அதற்கு ஏண்டா அழுகிறாய் என்ற போது அருமையான பாடல் என்றார் . அதற்கு ஏன் அழுகிறாய் என்று கேட்டபோது இவ்ளோ பெரிய செட்டில் நீங்கள் ஆடாமல் ஜான் பாபு ஆடினார் என்றார். டக்குனு விஜயகாந்திற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அப்பொழுதுதான் அவர் Realise செய்தார். டேய் திருட்டு நாயே இங்க வாடா. ஏதோ ஒரு கஷ்டப்பட்டு நல்ல படம் எடுக்கலாம் என்று வந்தால் நாசம் பண்ணி விட்றாத நீ என்று சொன்னார். அவர்களுடைய உறவு நண்பர்கள். சண்டை போட்டுக் கொள்வார்கள். வாடா போடா என்று பேசிக் கொள்வார்கள் . அந்த படம் எடுக்கும் போது எனக்கு 23 வயசு. விஜயகாந்த் எனை கூப்பிட்டு செல்வமணி எனக்கு ஏற்கனவே 9 படம் பிளாப்.
இது 10 ஆவது படம். ஆனா எனக்கு இன்னும் மூணு படம் கையில இருக்கு. ஆனா உனக்கு இது ஃபர்ஸ்ட் படம். ஈகோ வச்சி பண்ணுனா இதுதான் உனக்கு லாஸ்ட் . படம் ஓடவில்லை என்றால் உனக்கு இதுதான் லாஸ்ட் படம். எது நல்லதோ அதை செய் என்று சொன்னார். நான் பண்ணி படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டால் கூட எனக்கு பிரச்சினை வந்தது. ஆனால் அவரால் பிரச்சனை வந்ததே கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அதிமுகவின் எதிர்காலத்தையும் எடப்பாடி பழனிசாமியின் (EPS) அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கும் ஒரு 'வாழ்வா…
நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும்…
நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இணையதளத்தில் கசிந்த விவகாரம், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.வினோத்…
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…