மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களை யாருக்கும் தெரியாமல் இருக்காது. தற்போதைய காலகட்டத்தில் அனைத்து நடிகர் நடிகைகள் வீட்டு திருமண விழாக்கள் மற்ற விழாக்களில் கேட்டரிங் எடுத்து சிறப்பாக செய்து கொடுப்பவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். இவரிடம் டேட் கேட்டுவிட்டு தான் திருமணத்தையே வைக்கிறார்கள். அந்த அளவுக்கு படு பிஸியாக இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இவரின் தனித்துவமான மெனு மக்களை கவர்ந்து இருக்கிறது. இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தாங்கள் கடந்து வந்த பாதையும் அறியாத மறுபக்கத்தை பற்றியும் பகிர்ந்து இருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் கூறியது என்னவென்றால், என்னுடைய தாத்தா ரோட்டில் மோர்தான் விற்றுக் கொண்டிருந்தார். என்னுடைய அப்பாவிற்கு 10 வயது இருக்கும்போதே அவர் இறந்து விட்டார். என் அப்பா மிகவும் வறுமையான குடும்பத்தில் இருந்தார். அவர் 15 வயதிலேயே வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் கிடைத்த வேலைகளில் எல்லாம் செய்து வந்தார் எனது அப்பா. அதற்குப் பிறகு 20 வயதில் ஒரு ஹோட்டலில் சேர்ந்து எடுபிடி வேலைகள் செய்து கொண்டே சமையலை கற்றார்.
சிறிது காலத்திற்குப் பிறகு மாதம்பட்டி என்ற ஊரில் வந்து அவர் விவசாயம் செய்து செட்டிலானார். ஆனாலும் அவருக்கு கையில் சமையல் கலை இருக்கிறது அதை வைத்து ஏதாவது செய்யலாம் என்று சமையல் தொழிலை எடுத்து செய்து வந்து கொண்டிருந்தார். ஆனாலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. என்னுடைய தந்தை என்னை எப்போதுமே இந்த சமையல் தொழிலை எடுத்து செய்யாதே என்று தான் கூறுவார். ஏனென்றால் மற்ற தொழில்களுக்கு இருக்கும் பேரும் புகழும் இந்த சமையல் வேலைக்கு கிடையாது. சமையல்காரர் என்று துச்சமாக தான் பேசுவார்கள் என்று கூறினார். ஆனால் எனக்கு இந்த கேட்டரிங் தொழிலில் அதிக ஆர்வம் இருந்தது.
கேட்டரிங் டிப்ளமா எடுத்து முதலில் படிப்பை முடித்தேன். அதற்குப் பிறகு ஸ்டார் ஹோட்டலில் ஆறு மாதம் பணிபுரிந்தேன். அங்கு எனக்கு எளிதாக எந்த அனுபவமும் கிடைத்துவிடவில்லை. வெங்காயம் உரிப்பது சுத்தப்படுத்துவது போன்ற எல்லா வேலைகளையும் செய்து தொழிலை கற்றேன். நான் இந்த கேட்டரிங் தொழிலில் இறங்கிய பிறகு பைவ் ஸ்டார் மெனுவில் இருக்கும் உணவுகளை ஏன் சாதாரண மக்கள் வீட்டு விசேஷங்களில் நாம் கொண்டு சேர்க்கக்கூடாது என்று ஒரு புது ஐடியாவை உருவாக்கினேன்.
இந்த ஒரு ஐடியா எங்களை பிரபலமாக்கியது. அதுதான் எங்களை இன்று இந்த இடத்தில் வைத்து இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். 40 வருட காலமாக மாதம்பட்டி கேட்டரிங் வளர்ந்து வந்த விதம் இப்படித்தான். நாங்கள் எளிதாக இந்த இடத்திற்கு வரவில்லை. பல நஷ்டங்களையும் வலிகளையும் வேதனைகளையும் தாண்டி தான் வந்திருக்கிறோம் என்று யாரும் அறியாத தங்களது மறுபக்கத்தை பற்றி மாதம் பட்டி ரங்கராஜ் பகிர்ந்து இருக்கிறார்.
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, கணவர் செல்போன் அழைப்பை ஏற்காத விரக்தியில் தற்கொலை…