Connect with us

CINEMA

கணவருக்காக ஆசையாக வெயிட் பண்ண மகாலட்சுமி.. ஜாமீன் வழக்கில் திடீர் டுவிஸ்ட்.. செக் வைத்த நீதிபதி..!!

லிப்ரா ப்ரோடுக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ரவீந்தர் சந்திரசேகர் நடத்தி வருகிறார். இவர் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழிலதிபரான பாலாஜி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். திட கழிவுகளை இயக்க ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ளான அந்த திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

   

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செப்டம்பர் 7-ஆம் தேதி ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவரது ஜாமீன் தொடர்பான வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் ரவிந்தர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி,எஸ் ராமன், வழக்கறிஞர் வேல்முருகன் ஆகியோர் பாலாஜியிடம் 2 கோடி ரூபாய் திரும்ப அளித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கு எதிர் தரப்பு வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி இரண்டு கோடி ரூபாய் தந்துவிட்டதாக கூறுவது பொய், தற்போது வரை 16 கோடி வரை திரும்பத் தரவில்லை என கூறினார். இதனால் ரவீந்தர் 2 கோடி ரூபாய் வழங்கியதாக கூறப்படும் ஆவணங்களை போலீசார் சரிபார்த்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 6-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top