‘காந்தாரா’ சர்ச்சை.. கோர்ட் போட்ட உத்தரவு..! மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்..! நடந்தது என்ன..?

Spread the love

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ‘காந்தாரா சாப்டர்-1’ திரைப்பட விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நேரில் சுவாமி தரிசனம் செய்தார். கோவாவில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், ‘காந்தாரா’ படத்தில் வரும் ‘தெய்வ’ வழிபாட்டு முறையின் புனித சைகைகளையும் சத்தத்தையும் ரன்வீர் சிங் கிண்டல் செய்யும் விதமாக இமிடேட் செய்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இந்து மத நம்பிக்கைகளையும் பழங்குடியின மக்களின் வழிபாட்டையும் அவர் புண்படுத்திவிட்டதாக வலதுசாரி அமைப்புகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தன.

இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், நடிகர் ரன்வீர் சிங் தனது செயலுக்கு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி ரன்வீர் சிங் தரப்பில் முறையான மன்னிப்புக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தையும் நீதிமன்றம் ரத்து செய்தது. அதே வேளையில், தனது செயலுக்குப் பரிகாரமாக அடுத்த நான்கு வாரங்களுக்குள் கர்நாடகாவில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று நேரில் வழிபட வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

நீதிமன்றக் கெடு முடிவடைய இருந்த நிலையில், நடிகர் ரன்வீர் சிங் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முகக்கவசம் அணிந்து சாதாரண பக்தரைப் போல ரகசியமாக மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வந்தார். அங்கிருந்த அர்ச்சகரிடம் தான் செய்த தவறுக்காக அம்மனிடம் மன்னிப்புக் கேட்க வந்திருப்பதாகக் கூறி, கர்ப்பக்கிருகத்தில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் கூடுவதற்கு முன்பாகவே அவர் தனது பரிகார வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Swetha

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

7 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

7 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

7 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

7 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

7 மணத்தியாலங்கள் ago