#image_title
பிரபல நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் பிரியா இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜாவுடன் பேஸ்புக் மூலம் பழகியுள்ளார். இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக பழகி உள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரியாவிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த ராஜ்கிரண் தனது மகளின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் கடந்த 2022-ஆம் ஆண்டு பெற்றோரை எதிர்த்து பிரியாமுனிஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. பிரியா தனது வளர்ப்பு மகள் என்றும் தன்னை அசிங்கப்படுத்தவே இந்த திருமணத்தை செய்து கொண்டார் என ராஜ்கிரண் கூறினார்.
மேலும் தனது பெயரை எங்கும் உபயோகப்படுத்தக் கூடாது என எச்சரித்தார். சில மாதங்கள் கழித்து பிரியா தானும் தனது கணவரும் பிரிந்து விட்டதாக வீடியோ வெளியிட்டார். மேலும் அது சட்டபூர்வமான திருமணம் கிடையாது. நான் எனது அப்பாவை காயப்படுத்தி விட்டேன். இதற்காக நான் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் போதாது என கதறி வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில் பிரியா ஒரு ஊடகத்திற்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, என்னை காதலிக்கும் போது முனீஸ் ராஜா உருகி உருகி பேசினார்.
திருமணத்திற்கு பிறகு அவர் மாறிவிட்டார். நாங்கள் பதிவு திருமணம் செய்யவே இல்லை. திருமணத்தை பதிவு செய்யுமாறு கேட்டபோது தான் அவர் ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் எனக்கு தெரிந்தது. உன் அப்பாவிடம் பேசி பணம் வாங்கி வா என கூறி என்னை மிரட்டுவார்கள். என் அப்பாவை எதிர்த்து நான் திருமணம் செய்து கொண்டேன். இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. முனீஸ் ராஜாவின் அம்மா பணம் வாங்கி வர சொல்லி கெட்ட கெட்ட வார்த்தையால் தினமும் திட்டுவார்.
அது பற்றி கேட்டால் என்னை தினமும் அடிப்பார்கள். நான் மனதளவிலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன். அதை என் அம்மா எப்படியோ தெரிந்து கொண்டார். அதன் பிறகு என் அம்மா மூலம் எனக்கு பண உதவி கிடைத்தது. அந்த பணமும் பத்தவில்லை என கூறி என்னை சித்திரவதை செய்வார்கள். இதற்கு மேல் அவருடன் இணைந்து வாழவே முடியாது என்ற சூழ்நிலை வந்தது. இதனால் நான் என் அப்பாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். பின்னர் முனீஸ் ராஜாவை விட்டு பிரிந்து விட்டேன் என பிரியா கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…