#image_title
கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர் அப்பாஸ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர் ஆவார். அப்பாஸின் தாய் வழி தாத்தா, பெங்காலி நடிகர் மற்றும் அவரது தந்தைவழி குடும்பம் நடிகர் பெரோஸ் காணுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கல்லூரி நாட்களில் மாடலிங் செய்ய தொடங்கிய அப்பாஸ் பல மாடலிங் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். அப்படி பெங்களூரில் ‘ஃபேஸ் ஆப் 94’ என்ற மாடலிங் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மாடலிங் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அப்பாஸுக்கு கிடைத்தது.
1996 ஆம் ஆண்டு வினீத் மற்றும் தபுவுடன் ‘காதல் தேசம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணீக ரீதியாகவும் வெற்றி அடைந்து முதல் படமே வெற்றி படமானதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அப்பாஸ். இப்படத்தின் பாடல் முஸ்தபா முஸ்தபா இன்றுவரை எவெர்க்ரீன் பாடலாக உள்ளது.
தொடர்ந்து ‘விஐபி’, ‘பூவேலி’, ‘படையப்பா’, ‘சுயம்வரம்’, ‘மலபார் போலீஸ்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘மின்னலே’, ‘ஆனந்தம்’ போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார் அப்பாஸ். ஆனந்தம் திரைப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் பற்றி தொட்டியெங்கும் பரவி புகழ்பெற்றார் அப்பாஸ். ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘காதல் வைரஸ்’, ‘திருட்டுப் பயலே’ போன்ற திரைப்படங்களில் நடித்த அப்பாஸ் ஆரம்பகட்டத்தில் சாக்லேட் பாயாக இளைஞர்களின் நாயகனாக வலம் வந்த அப்பாஸ் 2000 களின் நடுப்பகுதியில் வாய்ப்பு இல்லாமல் சினிமா விட்டு ஒதுங்கி போகும் நிலை ஏற்பட்டது. அப்போதுதான் அப்பாஸ் ஹார்பிக் விளம்பரத்தில் நடித்தார். இதைப்பற்றி ஒரு நேர்காணலில் எமோஷனலாக பகிர்ந்துள்ளார் அப்பாஸ்.
அவர் கூறியது என்னவென்றால், ஒரு கட்டத்தில் எனக்கு சரியாக பட வாய்ப்புகள் எதுவுமே இல்லாமல் போனது. வருமானத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போதுதான் ஹார்பிக் விளம்பரத்தில் நடிப்பதற்கான ஆஃபர் கிடைத்தது. நான் எல்லோரிடமும் ஆலோசனை கேட்டேன் நண்பர்களிடம் எல்லாரிடமும் கேட்டேன். எல்லாருமே நீ ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர். இந்த மாதிரி விளம்பரத்தில் எல்லாம் நடிக்க கூடாது அப்படின்னு சொன்னாங்க. ஆனா எனக்கு அந்த விளம்பரத்துல நடிக்கிறது அசிங்கமா தெரியல. ஏன்னா நம்ம வீட்ட நாம எப்படி சுத்தம் பண்ணனும் நினைச்சுக்குறோமோ அதே மாதிரி தானே சுத்தம் பண்ற இது ஒரு பொருள் தானே அப்படினு நான் நினைச்சேன். அது மட்டும் இல்லாம நான் பட வாய்ப்பு இல்லாத காலத்தில் இந்த விளம்பரத்தினால் ஒரு சில வருஷம் என்னால வாழ முடிஞ்சது. அந்த விளம்பரம் தான் எனக்கு சாப்பாடு போட்டுச்சு என்று எமோஷனலாக பேசியுள்ளார் அப்பாஸ்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…