#image_title
தமிழ் சினிமாவின் நடிப்பு சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி என்பதாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சிவாஜி கணேசன். தமிழ் திரைப்பட துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் தான்.
நல்ல குரல் வளம், தெளிவான உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த முகபாவனைகள், நடிப்புத்திறன் ஆகியவை சிவாஜி கணேசன் தனிச்சிறப்புகள் ஆகும். இவரை சிம்ம குரலோன் என்றும் அழைப்பர். எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் சரி அதை உள்வாங்கிக் கொண்டு அசால்ட்டாக நடித்து விடுவார் சிவாஜி கணேசன். நடிப்பு பல்கலைக்கழகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன், சரித்திரம், புராணம், குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களும் ஏற்று திறம்பட நடிப்பவர்.
1960 ஆம் ஆண்டு எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட சர்வதேச சிறந்த நடிகர் விருதை பெற்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதாசாஹிப் பால்கே விருது, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுதான செவாலியர் விருது ஆகிய விருதுகளை பெற்றவர் சிவாஜி கணேசன்.
ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 ஆம் ஆண்டு பராசக்தி திரைப்படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இத்திரைப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு ஆகிய இருவர் இயக்கியிருப்பர். பி ஏ பெருமாள் முதலியார் இப்படத்தை தயாரித்து உள்ளார். இத் திரைப்படம் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்று பல திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது. இந்தத் திரைப்படம் சிவாஜி கணேசனுக்கு சினிமாவில் ஒரு ஏறுமுகத்தை கொடுத்தது என்று சொல்லலாம். இதற்குப் பின்னால் ஒரு சம்பவமும் இருக்கிறது.
சக்தி நாடக சபா நடத்திய நாடகத்தில் சிவாஜி கணேசன் நடிப்பை பார்த்து கவர்ந்த பெருமாள் முதலியார் அவரை சினிமாவில் நடிக்க வைக்க அழைத்து வந்தார். ஆனால் சிவாஜி கணேசனுக்கு எதிராக சினிமா துறையில் பல எதிர்ப்புகள் கிளம்பியது. பராசக்தி படம் எடுக்க முடிவெடுத்த பின்னரும் புதுமுகமான சிவாஜியை அதில் நடிக்க வைக்க ஏவிஎம் செட்டியார் உட்பட எவரும் விரும்பவில்லை. ஆனால் பெருமாள் முதலியார் சிவாஜி கணேசன் தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் பராசக்தி படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தில் நடிப்பதற்கு சிவாஜி கணேசனுக்கு சம்பளமாக 250 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. இப்படத்திற்கு திரைக்கதை வசனம் மு கருணாநிதி அவர்கள் எழுதியிருப்பார். பெருமாள் முதலியார் எதிர்பார்த்தது போலவே படம் ஹிட் ஆனது.
தனக்கு சினிமாவில் பல எதிர்ப்புகளையும் தாண்டி ஆதரித்து நாயகனாக நடிக்கும் வாய்ப்பினையும் வாழ்க்கையும் ஏற்படுத்தி தந்த பெருமாள் முதலியாரை சிவாஜி கணேசன் தனது மூச்சு உள்ள வரையிலும் மறக்கவில்லை. அவர் செய்த உதவிக்கான நன்றியையும் அவர் மறக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு முந்தைய தினம் பெருமாள் முதலியார் அவர்கள் வீட்டிற்கு சென்று அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி பொங்கல் சீரை கொடுத்து விட்டு வருவாராம். இது வருடா வருடம் சிவாஜி குடும்பத்தில் நடக்கும் வழக்கமாம். சிவாஜி கணேசன் தான் உயிருடன் இருந்த வரையில் பெருமாள் முதலியாரின் குடும்பத்திற்கு உதவிகள் செய்து பொங்கல் சீரூம் கொடுத்து வந்துள்ளார். பெருமாள் முதலியார் காலமான பிறகு அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு உதவிகளை செய்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தான் இறந்த பிறகு தன் பிள்ளைகளிடம் பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு என்றைக்கும் நம் நன்றியுடன் இருக்க வேண்டும் உதவிகள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றாராம். அப்படி செய்நன்றி மறவாத மனிதனாக சிவாஜி கணேசன் இருந்திருக்கிறார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…