வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் சென்னை.. கமுக்கமாக ரஜினி மகள் செய்த வேலை.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..

By Nanthini

Updated on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் கொண்டாடப்படும் ரஜினி சினிமா திரை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். 72 வயதிலும் அசாத்தியமான நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

   

 

இதனிடையே இரண்டாவது மகளான சௌந்தர்யா கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு சௌந்தர்யா கோவை தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகன் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் சௌந்தர்யாவின் கணவர் புதிதாக revalto கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு சுமார் 9 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கார் வாங்கிய புகைப்படத்தை சௌந்தர்யா ரஜினி இணையத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள். அதாவது சென்னை புயல் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் பலரும் அவர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனால் மக்களுக்கு எந்த வித உதவியும் செய்யாமல் இப்படி சொகுசு கார் வாங்கி போஸ் கொடுத்து இருக்கீங்களா என திட்டி தீர்த்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Soundarya Rajinikanth இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@soundaryaarajinikant)

author avatar
Nanthini