20 வருஷமா காதலிச்சு 45 வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. அதனால எங்களுக்கு.. மனம் திறக்கும் பிரபல நடிகர்..

By admin on டிசம்பர் 2, 2023

Spread the love

திரையுலகில் எத்தனையோ நடிகர் நடிகைகள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே கணவர் மனைவியாக நீண்டகாலம் வாழ்கிறார்கள். பலர் பாதியிலேயே பிரிந்து சென்று விடுகிறார்கள். ஆனால் இந்த தம்பதிகளின் கதை சற்று வித்தியாசமாக உள்ளது. அதன்படி பழம்பெரும் நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி திலகம் இவர்கள் இருவருமே நடிகர்கள் தான். திலகம் அவரது 20 வயதிலேயே எம்ஜிஆர் சிவாஜி போன்ற ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

இந்நிலையில் ராஜசேகர் மற்றும் திலகம் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் திலகத்தின் குடும்ப சூழ்நிலை காரணமாக உடனடியாக திருமணம் செய்து கொள்ள முடியவில்லையாம். அதனால் 20 ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்துள்ளனர் இந்த தம்பதி.

   

 

திருமணம் செய்யும்போது ராஜசேகருக்கு 45 வயதாம், திலகத்திற்கு 43 வயதாம். இருவரும் காதலில் ஜெயித்த மகிழ்ச்சியில் இருந்தாலும் தாமதமாக திருமணம் செய்ததால் இவர்களுக்கு குழந்தை இல்லையாம். இருப்பினும் அதை பற்றி எல்லாம் கவலையே இல்லாமல் இவர்களின் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும், நேரகானலில் பல விஷியங்களை பகிர்ந்து மகிழ்ந்தனர் ராஜசேகர் மற்றும் திலகம் தம்பதி.