மனித உணர்வுகளின் ஆழத்தை காட்டும் ஒரு உண்மையான தருணம் மும்பையில் நிகழ்ந்த நிலையில் அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையின் போரிவலி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் அமர்ந்திருந்த ஒருவரை திலக் துபே என்ற பயணி ஒருவர் கவனித்துள்ளார். அவர் அந்த நபர் அமைதியாக கண்ணீர் வடித்ததை பார்த்து உருக்கமான அந்த தருணத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். சில மணி நேரங்களில் அந்த வீடியோ வைரலானது. அந்த சமயத்தில் ரயில் நிலையம் கிட்டத்தட்ட காலியாக இருந்ததாக அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ரயிலை தவறவிட்ட போது அவர் அருகில் தலையை குனிந்து அழுத நபரை கவனித்ததாகவும் அவர் சத்தம் இல்லாமல் தன்னுடைய வலியை யாருக்கும் தெரியாமல் தனக்குள் அடக்கிக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். திலக் அந்த நபரிடம் சென்று நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்று கேட்டதும் அந்த நபர் சிறிது நிமிர்ந்து, சும்மா ஏதோ நினைவுக்கு வந்தது, விசாரித்ததற்கு நன்றி என்று சொல்லிவிட்டு மீண்டும் அமைதியாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆண்களும் அழுவார்கள் ஆனால் மௌனமாக மட்டுமே என்றும் சில நேரங்களில் வலியின் ஒரே மொழி மௌனமாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…