Connect with us

CINEMA

அந்த மனசு தான் சார் கடவுள்.. 10 ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

இல்லாதவர்களுக்கு உதவி செய்வது, பிறருக்காக இறக்கப்படும் சுபாவம், உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது என்பது மாபெரும் வரம், பிறரின் கனவுகளை அடைய உதவினால் நம் இலக்கை நாம் எளிதில் அடைந்து விடலாம் என்பது இயற்கை விதி. இன்றைய சூழலில் பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், ஏழைகள் ஏழைகளாகவுமே இருந்து வருகிறார்கள்.

   

சினிமா வட்டாரங்களில் படத்துக்கு படம் பல பிரபலங்கள் சம்பளத்தை ஏற்றி பல நூறு கோடிகள் சொத்துக்களை சேர்த்து வைக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் குறைந்த தொகை சம்பளம் பெற்றாலும் அதை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை சிலருக்கு தான் இருக்கின்றது. அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ்.

அவருடன் தற்போது KPY பாலாவும் சேர்ந்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவராக வளம் வருபவர் ராகவா லாரன்ஸ். சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் இயக்குனர், ஹீரோ என கலக்கி வருகிறார். சினிமாவில் நடிக்க தொடங்கிய முதலே பல ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். ஆதரவற்ற பல குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

இவரை ரோல் மாடலாக கொண்டவர் தான் KPY பாலா. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான இவர் படிப்படியாக உயர்ந்து வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் கூட ராகவா லாரன்ஸ் பாலாவை ஹீரோவாக அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இவர்கள் இருவரும் இணைந்து சமீப காலமாக பல மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது KPY பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து ஒரு நல்ல காரியம் ஒன்றை செய்திருக்கிறார்கள். அது என்னவென்றால் ஆட்டோ ஓட்டும் 10 பெண்கள் தங்களது வாகன கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்திருக்கின்றார்கள். நிதி பிரச்சனையில் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதை கேட்ட ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா இருவரும் சமமாக பணத்தை பகிர்ந்து கொண்டு அவர்களது ஆட்டோ கடனை நீக்கி சொந்த ஆட்டோக்களாக மாற்றி இருக்கிறார்கள்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top