“வெள்ளையா இருக்குற எதையும் சாப்பிடாதீங்க…!” ரஜினி சொன்ன ஒரே ஒரு சீக்ரெட்… 26 கிலோ எடையைக் குறைத்த… நடிகர் ராதா ரவி…!!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான 73 வயது ராதா ரவி, தனது உடல் எடையை 110 கிலோவிலிருந்து சுமார் 26 கிலோ வரை குறைத்து அசத்தியுள்ளார். உடல் எடை அதிகரிப்பால் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்ட அவர், சமீபகாலமாக மேற்கொண்ட தீவிர வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக தற்பொழுது சர்க்கரை நோயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த உடல்நல மாற்றத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மறைமுகமாக ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார். ‘லிங்கா’ படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த், “அரிசி உணவை அறவே நிறுத்த வேண்டும்; உப்பு, சர்க்கரை, பால், வெண்ணெய் போன்ற வெள்ளையாக இருக்கும் பொருட்களைச் சாப்பிடக்கூடாது” என்று மற்றவர்களிடம் அடிக்கடி கூறியதை ராதா ரவி கவனித்துள்ளார். அந்த வார்த்தைகளை மனதில் பதித்துக்கொண்ட அவர், அன்றிலிருந்து டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு, ‘பிளாக் காபி’ குடிக்கத் பழகியுள்ளார். இந்த நாள்பட்ட பழக்கமே அவரது உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவியுள்ளது.

உணவில் சாதத்தின் அளவை வெகுவாகக் குறைத்த ராதா ரவி, தான் ஒரு அசைவ பிரியராக இருந்தாலும், அசைவ உணவுகளை எப்போதும் அளவோடு மட்டுமே சாப்பிடுவதில் கவனமாக இருந்துள்ளார். மேலும், உடல் எடை குறையும் போது நிதானமாகவும் பொறுமையாகவும் குறைய வேண்டும், வேகமாக குறைந்தால் ஆபத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கட்டுப்பாடான வாழ்வியல் மாற்றங்களால், தற்போது தான் ‘இன்சுலின்’ எடுப்பதையே முழுமையாக நிறுத்திவிட்டதாக அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Swetha

Recent Posts

“உஷார் மக்களே…! ஃப்ரிட்ஜ்ல முட்டையை வச்சா ‘இப்படி’ ஆகிடுமா…? யாரும் சொல்லாத அதிர்ச்சி உண்மை…!!”

சந்தைகள் அல்லது பண்ணைகளில் நேரடியாக வாங்கப்படும் முட்டைகள் கிருமி நீக்கம் செய்யப்படாமல் விற்கப்படுகின்றன. இதனால் முட்டை ஓட்டின் மீது ஒட்டியிருக்கும்…

42 seconds ago

இரவோடு இரவாக விலகல்… அதிமுகவில் இருந்து 1,200 பேருடன் வெளியேறிய முக்கிய புள்ளி… இபிஎஸ்-க்கு அடுத்த தலைவலி….!

புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திருமயம் தொகுதி முன்னாள் அதிமுக வேட்பாளரான பி.கே. வைரமுத்து, கட்சித்…

1 minute ago

“அது எப்படி நடக்குது”?…. புதிய சர்ச்சையில் சிக்கிய முதல்வர் விஜய்…. ஆர்.எஸ். பாரதி கொடுத்த ஷாக் கம்ப்ளைன்ட்…. அடுத்த பரபரப்பு…!

அமைச்சரவை மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு…

4 minutes ago

12 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் மகா அதிசயம்…! இந்த 4 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது… நீங்க இருக்கீங்களா…?

ஜூலை 16ஆம் தேதி, சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனும் குரு பகவானும் குருவின் உச்ச ராசியான கடகத்தில் ஒன்றிணைகின்றனர்.…

8 minutes ago

விஜய்க்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்… “எம்.பி இருந்தா தான் உள்ளே.. இல்லனா” …. ஒரே போடாய் போட்ட மாணிக்கம் தாகூர்…!

நாடாளுமன்ற உறுப்பினர்களைக் (MP) கொண்டுள்ள அரசியல் கட்சிகள் மட்டுமே இந்தியா கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்…

9 minutes ago

தவெக கூட்டணியில் இல்லை… இரவோடு இரவாக அறிவிப்பு…. CM விஜய்க்கு செம ஷாக் நியூஸ்….!

நாளை நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட்…

15 minutes ago