புதுச்சேரி மாநிலத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்பாதிவாளரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி பத்திர பதிவுத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் அதிகாரிகள் இதற்கு உடனடியாக இருப்பதாகவும் அடிக்கடி புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் புதுச்சேரி சாரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள சர்பாதிவாளர் ஸ்ரீகாந்த் என்பவர் பத்திரப்பதிவு செய்ய வந்த ஒருவரை அலுவலகத்தின் கழிப்பறைக்கு அழைத்து சென்று இருபதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது . மேலும் இந்த சம்பவமானது கடந்த 16.10.2024 அன்று நடந்ததாகவும் இதுகுறித்து வீடியோ ஆதாரத்தோடு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீடியோவின் ஒரு பகுதியை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி குமாரபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெய்சங்கர் என்பவர் புகார் மனு அனுப்பியிருந்தார். அதன் பெயரில் இந்த புகார் குறித்து விசாரணை பத்திரப்பதிவுத்துறை ஆணையரான கலெக்டர் குலோத்துங்கன் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் ஸ்ரீகாந்தை சஸ்பெண்ட் செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…