Connect with us

CINEMA

விஜய் சார் முன்னாடியே அழுதுட்டேன்…. அவர் இப்படி சொல்லுவாருன்னு எதிர்பார்க்கல…. கண்கலங்கிய தயாரிப்பாளர் லலித்குமார்…!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெறமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் ஆக்சன், எமோஷன் என அனைத்துக்கும் பஞ்சமே இல்லாமல் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

   

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் எந்த ஒரு குறையும் இல்லை. லியோ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 148.5 கோடி வசூல் செய்தது. இந்த 2023 ஆம் ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்று பெருமையை லியோ திரைப்படம் பெற்றிருக்கின்றது. மூன்று நாள் முடிவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த திரைப்படம் சாதனை படைத்துள்ளது .

இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் மிகப்பெரிய சந்தோசத்தில் இருக்கிறார். இவர் பல youtube சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கொடுத்த இன்டர்வியூவில் விஜய் பற்றி மிகவும் பெருமையாக பேசி இருந்தார். லோகேஷ் உடன் கதையைக் கேட்டு கமிட்டான உடனே விஜய் சார் தன்னை போன் செய்து அழைத்து இந்த திரைப்படத்தை நீங்கள் தயாரிக்கிறீர்களா என்று கேட்டார். அதை கேட்டவுடன் எனக்கு அழுகையே வந்து விட்டது.

அது மட்டும் இல்லாமல் ஒரு முறை காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புவதற்கு விஜய் முடிவு செய்திருந்தார். இதில் என்னவென்றால் காஷ்மீரில் இருந்து முதலில் டெல்லி வந்து டெல்லியில் இருந்து தான் சென்னை வரவேண்டும். இதனால் ஒரு சார்ட்டர்ஃபிளை புக் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அதை தானே செய்து தருவதாக கூறினார். ஆனால் விஜய் நான் நடிப்பதற்கு நீங்கள் சம்பளம் கொடுத்தால் மட்டும் போதும் இதையெல்லாம் நீங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை.

நானே பார்த்துக்கொள்கிறேன் என்று தனது சொந்த செலவிலேயே அவர் சென்னை திரும்பி பின்னர் மீண்டும் படப்பிடிப்புக்கு அவரது சொந்த செலவிலேயே வந்தார் என்று கூறியிருந்தார். பெரும்பாலான நடிகர்கள் நடிக்க வருவதற்கு தனியாக பிளைட் வேண்டும் என்று கேட்பார்கள். இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் கூட அது போன்று விஜய் செய்தது கிடையாது என அவர் பெருமையாக பேசினார்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top