Categories: சினிமா

அட்டகத்தி படத்தின் பட்ஜெட்டை விட ப்ரோமோஷனுக்கு ஆன செலவு தான் அதிகம்.. தயாரிப்பாளர் சிவி.குமார் பகிர்ந்த தகவல்..!

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் சிவி குமார். திருக்குமரன் என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலமாக படங்களை தயாரித்து வருகின்றார். தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் விநியோகஸ்தர் என பல திறமைகளுடன் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் முதன் முதலில் கடந்த 2011 ஆம் ஆண்டு அட்டக்கத்தி என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்தார். இந்த திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கி இருந்த நிலையில் தினேஷ் நாயகனாக நடிக்க நந்திதா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் காதல் நிறைந்த நகைச்சுவை திரைப்படமாக இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் தினேஷ் அட்டகத்தி தினேஷ் என அனைவராலும் அழைக்கப்பட்டார். தன்னுடைய முதல் படத்திலேயே நல்ல வெற்றியைப் பெற்ற சிவி குமார் அடுத்ததாக பீட்சா மற்றும் சூது கவ்வும் என தொடர்ந்து பாராட்டும் ரீதியான படங்களை இயக்கி இருந்தார். தற்போதும் தொடர்ந்து சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் இயக்கிய படங்களுக்கு ப்ரொமோஷனுக்காக செலவு செய்யப்பட்டதை வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில், நான் முதன்முதலாக அட்டகத்தி என்ற திரைப்படத்தை தயாரித்தேன். அந்தப் படத்தின் முழு பட்ஜெட் 1.75 கோடி. அந்த படத்தின் ப்ரோமோஷன் 3.5 கோடி. சரியாகப் பார்த்தால் படத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு. அந்தப் படத்தை ரிலீஸ் செய்ததன் மூலம் வந்த வருமானமும் 3.5 கோடி தான். அதனைப் போலவே என்னுடைய இரண்டாவது படமான சூது கவ்வும் படத்தை 1.5 கோடியில் எடுத்தோம். படத்தின் ப்ரோமோஷனுக்காக 1.75 கோடி செலவு பண்ணோம். அவ்வளவு ப்ரொமோட் பண்ணியும் நான் பண்ண செலவு விட 50 லட்சம் தான் எனக்கு கிடைத்தது. ஒரு படத்த ப்ரமோஷன் பண்றதுக்கு ஆகுற செலவுதான் அதிகம் என்று அந்த நிகழ்ச்சியில் சிவி குமார் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

10 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

33 minutes ago

“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…

46 minutes ago

பகீர்.. மரணக் குவியலாக மாறிய லக்னோ கட்டிடம்… கொளுந்துவிட்டு எரிந்த தீயில் 14 உயிர்கள் சாம்பல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…

46 minutes ago

ச்சீ.. பெற்ற தாய் என்றும் பாராமல்… வெளிநாடு செல்ல ரூ.20 லட்சம் கேட்டு… கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கிய மகன்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…

56 minutes ago

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

1 மணத்தியாலம் ago