துரை வைகோவின் சமீபத்திய நேர்காணல் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கரூர் சம்பவம் நடந்த சமயத்தில், முதல்வர் விஜயைக் குற்றவாளியாகச் சித்தரித்து அறிக்கை வெளியிடுமாறு திமுக தரப்பிலிருந்து மதிமுகவுக்குக் கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் இரவு தனது தந்தை வைகோவிடம் பேசி, முறையான விசாரணை எதுவும் இன்றி விஜய்க்கு எதிராக எவ்வித அறிக்கையும் அளிக்கக்கூடாது என்று தாம் உறுதியாகத் தடுத்து நிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நிலவரங்கள் மற்றும் கூட்டணி நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், விஜய்யை முதலமைச்சராக வரவிடாமல் தடுப்பதிலேயே திமுக தீவிரமாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டினார். கூட்டணிக்குள்ளேயே எழுந்த ஈகோ மற்றும் தனிப்பட்ட ஆளுமைப் போராட்டங்களே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறிய துரை வைகோ, தேர்தல் முடிவுகளுக்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்படும் முடிவை திமுக தலைமை எடுத்ததாகவும், இது மற்ற கூட்டணி தோழர்களுக்கும் தொண்டர்களுக்கும் பேரதிர்ச்சியை அளித்ததாகவும் தெரிவித்தார்.
பண பலமும் சாதி-மத அரசியல் தூண்டுதல்களும் நிறைந்த இன்றைய சூழலில், விஜய் ஒரு பைசா கூடச் செலவழிக்காமல், ஊழலற்ற நேர்மையான ஆட்சியைத் தருவேன் என்று கூறி வெற்றி பெற்றிருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்தார். மூப்பனார், வைகோ, விஜயகாந்த் போன்ற மாபெரும் தலைவர்களால் சாதிக்க முடியாத மாற்றத்தை விஜய் சாத்தியமாக்கியுள்ளது, ஒரு தனிப்பட்ட நபராகத் தனக்குப் பெரும் மகிழ்ச்சியளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தவெக அரசின் மீது அவதூறுகளைப் பரப்பி, ஆட்சியை வீழ்த்தத் திட்டமிட்டு வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏ.க்களைக் குதிரைப் பேரம் மூலம் திமுக தங்கள் பக்கம் இழுத்துவிட்டதாகச் சாடிய துரை வைகோ, வரும் காலங்களில் தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்கும் சூழல் கூட உருவாகலாம் என்று அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…