உச்சகட்ட கொடூரம்… கர்ப்பிணி அண்ணியை கற்பழித்து வயிற்றில் மிதித்து கொலை செய்த 15 வயது சிறுவன்… அண்ணனையும் கொன்று வீட்டிலேயே புதைத்த பகீர் சம்பவம்…!

Spread the love

குஜராத் மாநிலத்தில் உள்ள ஷோபாவத்தல கிராமத்தை சேர்ந்த விபாபென் என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் 22 வயதில் ஷிவம்கிரி என்ற மகனும் 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தாய் தன்னுடைய இரண்டு மகன்களுடனும் தனியாக வசித்து வந்தார். இதனிடையே மூத்த மகன் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவருடைய தம்பி எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே இளைய மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தாய் மற்றும் அண்ணனிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மூத்த மகனுக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய காஞ்சனா குமாரி என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. அனைவரும் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்த நிலையில் காஞ்சனா தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல சிவம் கிரியின் தம்பி குடித்துவிட்டு வீட்டிலிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அண்ணன் தம்பியை கண்டித்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 15 வயது சிறுவன் வீட்டிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து அவருடைய அண்ணனை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார். பிறகு இதனை தனது அண்ணி வெளியில் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் சிறுவன் கர்ப்பிணி அண்ணியை கற்பழித்து வயிற்றில் மிதித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் இருவருடைய உடல்களையும் வீட்டுக்குள் குழிதோண்டி புதைத்து விட்டு மற்ற ஆதாரங்களையும் தீயிட்டு எரித்து அழித்துள்ளார். இதற்கு அவருடைய தாயும் துணையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் 16 நாட்களுக்குப் பிறகு காஞ்சனாவின் பெற்றோர்கள் தனது மகளை தொடர்பு கொள்ள முயற்சித்த போது மகன் மற்றும் மருமகன் இருவரும் செல்போனை எடுக்காததால் 15 வயது சிறுவனிடம் அவர்கள் விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின்னாக பதிலளித்து இருவரும் விபத்தில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளான். இதனால் சந்தேகம் அடைந்த காஞ்சனாவின் பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் 15 வயது சிறுவன் அண்ணன் மற்றும் அண்ணியை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிறுவனை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

4 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

4 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

4 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

4 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

5 மணத்தியாலங்கள் ago