“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

Spread the love

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார் 2,700 கிலோமீட்டர் தூரத்தை ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் கடந்து சாதனை படைத்துள்ளனர். விமானம் அல்லது ஏசி வாடகை கார்களைத் தவிர்த்து, இந்தியாவின் சாமானிய வாகனமான ஆட்டோவில் பயணிக்கும் இவர்களது இந்த வினோதமான முயற்சி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

நாக்பூர் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது, முன்னவர் கான் என்ற நபர் இந்த சுற்றுலாப் பயணிகளைச் சந்தித்து வீடியோ எடுத்துள்ளார். வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட அந்த ஆட்டோவில் தங்களது பயணப் பொதிகளுடன் மிக உற்சாகமாகப் பயணித்த அந்த ஆஸ்திரேலியர்கள், இந்தியாவின் கலாச்சாரத்தையும் மக்களையும் மிக நெருக்கமாக அனுபவிக்கவே இந்த ஆட்டோ பயணத்தைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியுள்ளனர்.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும், “உண்மையான பயண அனுபவம் என்பது இதுதான்” என்றும், “குறைந்த பட்ஜெட்டில் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க இதைவிடச் சிறந்த வழி இருக்க முடியாது” என்றும் பாராட்டி வருகின்றனர். ஆடம்பர வசதிகளைத் தேடாமல், உள்ளூர் வாழ்க்கையோடு இணைந்து இந்தப் பயணிகள் மேற்கொள்ளும் இந்த சாகசப் பயணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Swetha

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

57 minutes ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

1 மணத்தியாலம் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

2 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

2 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

2 மணத்தியாலங்கள் ago