பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளில் இருந்தே அதிரடியாக விளையாடிய பிரதீப் ஆண்டனியின் மீது சக ஹவுஸ்மேட்ஸ்கள் அளித்த புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் காரணமாக பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதுவரை நடந்த சீசன்களில் வைத்து பார்க்கும் போது இந்த சீசனில் களமிறங்கிய பிரதீப் ஆண்டனியை போல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தெளிவாக புரிந்து கொண்டு விளையாட வந்தவர்கள் யாரும் இல்லை என சொல்லும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை புரிந்து கொண்டு விளையாடியவர் தான் பிரதீப். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு விளையாட்டு இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்ற விஷயத்திலும் பிரதீப் ஆண்டனி ஒட்டுமொத்த ஹவுஸ் மேட்ஸ்களுக்கும் தனிநபராய் அனைவரையும் எதிர்த்து அசைக்க முடியாத ஒரு போட்டியாளராக வலம் வந்தார்.
இதுதான் என்னுடைய கேரக்டர், இப்படித்தான் நான் பேசுவேன் இப்படித்தான் நடத்துவேன் அனைவரையும் என்பது போல, காதல் கன்டென்ட் ரெடி செய்வது பற்றி பேசுவது, பெண்களைப் பற்றி மட்டமாக பேசுவது, மரியாதை இன்றி எல்லோரிடமும் பேசுவது சண்டை பிடிப்பது, ஒரு உச்சகட்டத்திற்கு அந்த சண்டை சென்ற பிறகும் அதனை உணர்ந்து மன்னிப்பு எதுவும் கேட்காமல் அலட்சியப்படுத்துவது, குறிப்பாக பெண்களை குறித்து செய்யும் கமெண்ட்கள் என பிரதீப் செய்த சேட்டைகளும் ஏராளம்.
எது எப்படியோ தற்பொழுது பிரதீப் மெஜாரிட்டி போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்பட்டு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த விஷயம் தான் தற்பொழுது இணையம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஒருபுறம் ஒருசிலர் அவருக்கு ரெட் கார்டு கொடுத்தது சரி தான் என்று கூறினாலும், பலர் இதனை கண்டித்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய யுகேந்திரன் மற்றும் அவரது மனைவியும் பிரதீபுக்கு ஆதரவாக வீடியோக்களையும், பதிவுகளையும் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளரான யுகேந்திரன் அளித்திருக்கும் பேட்டியில் தன்னிடம் பிரதீப்பின் காதலி பேசியதாகவும், ‘பிரதீப் வெளியில் வந்ததற்கு அவர் சந்தோசப்பட்டதாகவும், அவர் வெளியில் வந்தது நல்லது தான் ‘ என்று அவர் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல எண்கணித ஜோதிடர் ஆரியவர்தன், நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரின் ஜாதக அமைப்புகள் குறித்து வெளியிட்டிருக்கும் கணிப்புகள்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்குக் கால அவகாசம் தேவை…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை கிராமத்தில், போதை பழக்கத்தால் விளைந்த ஒரு கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பிச்சாண்டாம்பாளையத்தில், லாரி ஓட்டுநரான தங்கராஜ் என்பவர் தனது மனைவி அமுதாவால் கொடூரமாகக் கொலை…
நடிகை ஓவியாவின் இந்த அதிரடிப் பதிவு கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நடிகர் விஜய்யின் நிழலாகச்…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள…