பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகுவது வழக்கம். அந்தவகையில் தற்பொழுது நடிகை தேவயானியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தேவயானி. தல அஜித், தளபதி விஜய், பிரபு, விக்ரம், சரத்குமார், கமலஹாசன், பிரசாந்த் போன்றோருடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.
‘தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை தேவயானி. இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை தேவயானி வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் கால்பதித்தார். இதில் மாபெரும் வெற்றி தொடராக அமைந்தது ‘கோலங்கள்’. இவர் பிரபல இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளித்திரையில் தற்பொழுது ‘அனுகிரஹம்’ என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை தேவயானியின் தம்பி நகுலும் இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமாகி , தற்பொழுது இவரும் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வரும் நடிகை தேவயானியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…