இந்த புகைப்படத்தில் இருப்பவர், இன்று தென்னிந்திய சினிமாவின் மிகப் பிரபலமான நடிகை… கண்டுபுடுச்சிடீங்களா…?

By Begam on கார்த்திகை 9, 2023

Spread the love

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகுவது வழக்கம். அந்தவகையில் தற்பொழுது நடிகை தேவயானியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தேவயானி. தல அஜித், தளபதி விஜய், பிரபு, விக்ரம், சரத்குமார், கமலஹாசன், பிரசாந்த் போன்றோருடன்  ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

   

‘தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை தேவயானி. இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை தேவயானி வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் கால்பதித்தார். இதில் மாபெரும் வெற்றி தொடராக அமைந்தது ‘கோலங்கள்’. இவர் பிரபல இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

   

 

இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளித்திரையில் தற்பொழுது ‘அனுகிரஹம்’ என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை தேவயானியின் தம்பி நகுலும் இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமாகி ,  தற்பொழுது இவரும் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.  வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வரும் நடிகை தேவயானியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.