தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் வலம் வரும் இருவர் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தை நேற்று, இன்று, நாளை படத்தின் இயக்குநரான ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, இஷா கோபிகர், பால சரவணன் என் பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரஹ்மான் படத்திர்கு இசையத்துள்ளார். .இந்த நிலையில் படம் வரும் பொங்கல் ட்ரீட்டாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பறக்கும் தட்டு, ஏலியன் என ஜானர் மாறும் டீசரின் கிராஃபிக்ஸ் காட்சிகள் பிசிறில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளன. சிவகார்த்திகேயன் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, ஏலியன் காட்சிகள் என இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் தற்பொழுது உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தை சாணி காகிதம் மற்றும் ராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். பீரியட் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நிவேதிகா சதீஷ் மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவ்விரண்டு திரைப்படங்களும் வரும் பொங்கல் ட்ரீட்டாக வெளியாகி நேருக்கு நேர் மோத உள்ளது. இதனால் தற்பொழுது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' அதிரடிப் படை, தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வராக விஜய்…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது 7 கோடி உறுப்பினர்களுக்கான பணப்பலன்களைப் பெறும் முறையை அதிரடியாக எளிமைப்படுத்தி…
பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைத் தொடர்ந்து, தற்போது வாகனங்களுக்கான CNG விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு கிலோ…
சமையல் எண்ணெயை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வறுத்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இன்று பல வீடுகளில்…
கடலோரப் பகுதிகளான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நண்டு ரசம் ஒரு சிறந்த மருத்துவ உணவாகக் கருதப்படுகிறது. சளி, இருமல் மற்றும்…
பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து…