Categories: சினிமா

சில்க் ஸ்மிதா மரணத்தில் இதுவரை நீடிக்கும் மர்மம் – அவருடன் வாழ்ந்த அந்த தாடிக்காரர்தான் இத்தனைக்கும் காரணமா?

Spread the love

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா, இன்றும் பெயர் சொன்னவுடன் கவனிக்கப்படும் ஒரு நடிகையாக, அந்த காலத்தில் புகழுடன் வாழ்ந்திருக்கிறார். படத்தில், சில்க் ஸ்மிதாவின் ஒரு நடன பாட்டு இருந்தால் போதும், வசூலை அள்ளி விடலாம் என்பதே தயாரிப்பாளர்களின் எண்ணமாக இருந்தது. அது மிகப்பெரிய உண்மையாகவும் இருந்தது. ஆனால், அப்படி செல்வாக்குடன் வாழ்ந்த சில்க் ஸ்மிதா மரணத்தில் இன்னும் மர்மம் விளங்கவில்லை. அவருடன் வாழ்ந்த அந்த தாடிக்காரர் என்ன செய்தார் என்பதும் புதிராக இருக்கிறது.

அப்போது தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதாவுடன் திடீரென காணப்பட்டார் அந்த தாடிக்காரர். அவர் பெயர் ராதாகிருஷ்ணன், டாக்டர் என்றும், கால்நடை டாக்டர் என்றும் கூறப்பட்ட நிலையில், அவர் டாக்டரே இல்லை என்றும் கூறப்படுகிறது. ஷூட்டிங், வீடு என எல்லா நேரத்திலும் சில்க் ஸ்மிதாவுடன் காணப்பட்ட அவர், ஒரு கட்டத்தில் சில்க் சம்பளம், கால்ஷீட், வரவு செலவு எல்லாவற்றையும் கவனிக்க ஆரம்பித்தார்.

அவரது அறிவுரைப்படி, தனது சம்பளத்தை கூட கறாராக பேசி, அடாவடியாக வாங்க துவங்கி, திமிர் பிடித்தவர் என்ற கெட்ட பெயரை சில்க் சம்பாதித்துக் கொண்டார். அந்த தாடிக்காரர் சில்க் ஸ்மிதாவின் அம்மா, சகோதரர் ஆகியோரையும் சந்திக்க விடாமல், அந்த சொந்தங்களையும் துண்டித்து விட்டிருக்கிறார் அந்த தாடிக்காரர். மேலும், பல நேரங்களில் கண்கள் சொருகியபடி ஒருவித போதையில் இருப்பது போல சில்க் ஸ்மிதா காணப்பட்டிருக்கிறார்.

தாடிக்காரர் ராதாகிருஷ்ணன் மகனுடன் எனக்கு திருமணம் என, டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவிடம் சில்க் ஸ்மிதா கூறிச் சென்ற சில தினங்களில், அவரது வீட்டில் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வந்துள்ளது. கழுத்தில் காயங்களுடன் இருந்த அவர் உடல் எரிக்கப்பட்டுள்ளது. படங்கள் தயாரித்த வகையில், அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக ஒரு தகவல் இருந்தாலும், அவர் படங்களில் நடிக்க பெற்ற அதிக சம்பளத்தை வைத்து பார்க்கும் போது, தயாரிப்பு நஷ்டம் எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல என்றும் தெரிய வருகிறது.

சில்க் ஸ்மிதா வாழ்வில் திடீரென நுழைந்த அந்த தாடிக்காரர், கொஞ்ச நாட்களில் தனது கட்டுப்பாட்டுக்குள் சில்க் ஸ்மிதாவை கொண்டு வந்து, அவர் நினைத்தபடி எல்லாம் அவரை ஆட்டுவித்திருக்கிறார். கடைசியில், அவர் உயிரிழந்த நேரத்திலும் அவர்தான் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. உண்மையில் நடந்தது என்ன, என்பது இன்றுவரை அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளாகவே இருக்கிறது.

admin

Recent Posts

“மூளை முதல் இதயம் வரை”… உடலில் ஒரு உறுப்பு கூட இல்லை… வெனிசுலாவில் பலியான இந்திய மாலுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…

22 minutes ago

“விஜய்க்கு வந்த மிகப்பெரிய சோதனை”…. ஆளுநரிடம் சிக்கிய 7 பக்க ரகசிய கடிதம்… திமுக போட்ட அதிரடி ஸ்கெட்ச்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…

33 minutes ago

BREAKING: ஒரே நேரத்தில் 15 தவெக MLA-க்கள் ராஜினாமா…. தவெக ஆட்சியை கவிழ்க்க சதி… நள்ளிரவில் உளவுத்துறை கொடுத்த அந்த ரகசிய ரிப்போர்ட்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், தற்போதைய ஆட்சிக்கு எதிராக திரைக்குப் பின்னால் நடந்த ஒரு பெரும்…

39 minutes ago

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பொலிரோ கார் கும்பல்… மதுரையில் நள்ளிரவு பயங்கரம்… திமுக பிரமுகர் கொலையில் திடுக்கிடும் பின்னணி…!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கலாநிதி, நள்ளிரவில் மர்ம கும்பலா மிகக்…

42 minutes ago

“5 முன்னாள் அமைச்சர்கள், 10 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்”…. ஒரே நாளில் 15,000 பேர்…. விஜய்யின் கூடாரத்திற்கு மாறும் தமிழக அரசியல்…. அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

51 minutes ago