“மூளை முதல் இதயம் வரை”… உடலில் ஒரு உறுப்பு கூட இல்லை… வெனிசுலாவில் பலியான இந்திய மாலுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

Spread the love

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான ராகேஷ், தனியார் நிறுவனம் மூலம் வணிகக் கப்பலில் மாலுமியாக வெனிசுலா நாட்டிற்குச் சென்றார். அங்கு அவர் கடந்த மே மாதம் திடீரென உயிரிழந்ததாகக் கப்பல் நிறுவனம் தெரிவித்தது. ராகேஷின் மரணம் குறித்து ஆரம்பத்தில் கீழே விழுந்து காயமடைந்ததாகக் கூறிய நிறுவனம், பின்னர் மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக முரண்பட்ட தகவல்களை அளித்துள்ளது.

சுமார் ஒரு மாத போராட்டத்திற்குப் பிறகு ஜூன் 4ஆம் தேதி ராகேஷின் உடல் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது. உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இரண்டாவது உடற்கூறாய்வில், அவரது குடும்பத்தினரையும் மருத்துவர்களையும் உலுக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன. ராகேஷின் உடலில் கழுத்தில் இருந்து இடுப்புப் பகுதி வரையிலும், தலையின் பின்புறத்திலும் தையல்கள் போடப்பட்டு, மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய உள் உறுப்புகளும் முழுமையாக அகற்றப்பட்டுக் காலி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. வழக்கமான உடற்கூறாய்வுப் பரிசோதனைக்கு அப்பாற்பட்டு, அனைத்து உறுப்புகளும் திருடப்பட்டிருப்பது போன்ற இந்தச் செயல் அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியாமல் தடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய மாலுமிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கடும் கவலை தெரிவித்துள்ளதோடு, வெளிநாடுகளில் இந்திய மாலுமிகள் இது போன்ற விசித்திரமான விபரீதங்களுக்குப் பலிகடாக்களாக மாற்றப்படுகிறார்களோ என்ற அச்சத்தையும் எழுப்பியுள்ளது. வெனிசுலாவுக்கான இந்தியத் தூதரகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, முழுமையான உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் இறப்புக்கான உண்மையான காரணத்தை வெனிசுலா அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ராகேஷின் குடும்பத்தினருக்குத் தகுந்த இழப்பீடும், இந்த மர்ம மரணத்திற்கு முறையான நீதியும் கிடைக்க மத்திய அரசு உடனடியாகத் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Visaka

Recent Posts

இபிஎஸ்-க்கு விழுந்த பேரிடி… தவெக வேண்டாம்… அண்ணாமலையுடன் கைகோர்க்கும் எஸ்பி வேலுமணி… கொங்கு மண்டலத்தில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் வெளியேற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்வது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

6 minutes ago

அப்போ அப்படி… இப்போ இப்படி… தவெக பெண்களின் பழைய வீடியோவை போட்டு மானத்தை வாங்கிய ஜூலி! ஆதாரத்தோடு வெளியான அதிர்ச்சி வீடியோ…!

தமிழ்நாடு அரசியலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேயான மோதல் தற்போது சட்டமன்றத்தைத் தாண்டி சமூக வலைதளங்களில்…

16 minutes ago

FLASH NEWS: அதிமுகவில் முக்கிய தலைவர்கள் ராஜினாமா… தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு..!

அதிமுகவில் திடீர் திருப்பமாக, கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

31 minutes ago

இனிமே சர்வ நாசம் தான்… “உலக வரைபடத்தில் ஈரான் இருக்காது”… அதிபர் ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கையால் பதறும் உலக நாடுகள்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி…

35 minutes ago