கேரள மாநிலம் திருச்சூர் வெளியன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில், ஜோதி (30) என்ற பெண் மற்றும் அவரது பச்சிளம் குழந்தை ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 27-ம் தேதி பாவரட்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருடன் வந்து இந்த விடுதியில் ஜோதி அறை எடுத்துள்ளார். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் சென்றுவிட, ஜோதி மட்டும் தனியாக தங்கியிருந்துள்ளார். நேற்று ஆட்டோ ஓட்டுநர் ஜோதியை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்து லாட்ஜ் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு தொப்புள் கொடி கூட துண்டிக்கப்படாத நிலையில் ஜோதியும், அவரது பச்சிளம் குழந்தையும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஜோதி, மருத்துவமனைக்குச் செல்லாமல் தனியாக அறையிலேயே தங்கி சுயமாக பிரசவம் பார்க்க முயன்றதாகத் தெரிகிறது. அப்போது முறையான மருத்துவ உதவி கிடைக்காததாலும், கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதாலும் தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். தற்போது இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக, ஜோதிக்கு அறை எடுத்துக்கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், ஜோதிக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததாகக் கூறியதால் வெளியில் இருந்து மருந்து வாங்கி மட்டுமே கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது ஆட்டோ ஓட்டுநருக்கும், லாட்ஜ் ஊழியர்களுக்கும் தெரியுமா? மற்றும் வயிற்று வலி என்று கூறிய பெண்ணை ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை? போன்ற பல கோணங்களில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இந்த மரணங்களுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவருடைய மனைவி தனலட்சுமி…
தமிழக அரசியலில் "குதிரை பேர" விவகாரம் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக்…
தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கே. பாக்யராஜ் அவர்கள், சமீபத்தில் தனது 73ஆவது…