வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவருடைய மனைவி தனலட்சுமி (36). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். வீட்டு வேலை செய்து வந்த தனலட்சுமியின் நடத்தையில் விஜயகுமாருக்கு நீண்ட நாட்களாகவே சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், தனலட்சுமிக்கு திருமணத்தைத் தாண்டிய சில நட்பு வட்டாரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனலட்சுமி தனது இரண்டாவது மகளை அழைத்துக்கொண்டு ஆம்பூரிலுள்ள ஒரு சினிமா தியேட்டருக்குச் சென்றுள்ளார். அங்கு சின்னவரிக்கம் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்ற ஆண் நண்பர் இவர்களுக்காகக் காத்திருந்து, அனைவரும் ஒன்றாகப் படம் பார்த்துள்ளனர். படம் முடிந்ததும் குமரேசன் அவர்களை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை அப்பாவிடம் சொல்லக் கூடாது என்று தனலட்சுமி தனது மகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்த விஷயம் கணவர் விஜயகுமாருக்குத் தெரியவர, அவர்களுக்குள் மீண்டும் கடுமையான வாக்குவாதம் வெடித்தது. ஏற்கெனவே இருந்த ஆத்திரத்தோடு, மனைவியின் இந்தச் செயலும் சேரவே, ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற விஜயகுமார் தனலட்சுமியைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். நேற்று விஜயகுமாரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மேல்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், தனலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தப்பியோட முயன்ற விஜயகுமாரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி…
விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் களமிறங்குவது உறுதியாகியுள்ளதாக அமைச்சர் கே.ஏ.…
தமிழகத்தில் தகுதியுள்ள முதியோர்களுக்கு உதவும் வகையில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் 2 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று…
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காவல் துறையினரால்…
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே 26 வயது செவிலியர் உத்ரா கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் பணிபுரிந்த 23 வயது…