ஸ்டாலின் – இபிஎஸ் ரகசியக் கூட்டணி?… தவெக ஆட்சியை கவிழ்க்கப் பின்னப்பட்ட 35 கோடி… நேரடி மிரட்டல் விடுத்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்…!

Spread the love

தமிழக அரசியலில் “குதிரை பேர” விவகாரம் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் தங்களுக்கு சாதகமாக வாக்களிக்கக் கோரி 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசி மிரட்டியதாகத் தேர்தல் வியூக வகுப்பாளர் திருநாவுக்கரசு உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் வழிகாட்டுதல் இருப்பதாகக் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கடுமையாகத் சாடியுள்ளார். தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க 40 முதல் 50 கோடி ரூபாய் வரை திமுகவினர் பேரம் பேசுவது மிகக் கேவலமானது என்று குறிப்பிட்ட அவர், “மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும், கூட்டணித் தலைவர்களிடம் பேசி எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க ஸ்டாலின் முயன்று தோற்றுள்ளார்; இதற்கு அவருக்குக் கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முதலமைச்சர் வேட்பாளராகத் தோற்ற ஸ்டாலின் உடனடியாக அரசியலை விட்டு விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒரு வழியில் திமுகவுடன் கூட்டுச் சேர்ந்து, தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியைத் கவிழ்க்கச் சதி செய்கிறார் என்று அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். செந்தில் பாலாஜியின் ‘கரூர் கம்பெனி’ ஆட்களை வைத்துக்கொண்டு இதுபோன்ற கீழ்த்தரமான வேலைகளில் திமுக ஈடுபடுவதாகக் குறிப்பிட்ட அவர், மாட்டிக்கொண்ட பின்னர் தப்பிக்கவே திமுகவினர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்து நாடகமாடுகிறார்கள் என்றார். ஓட்டுக்குப் பணம் தராமல் நேர்மையாகத் தேர்தலைச் சந்திப்பதால், ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளுக்கு அஞ்சாமல் மீண்டும் மக்களைச் சந்திக்கத் தவெக அரசு தயாராக இருப்பதாக அவர் சவால் விடுத்துள்ளார்.

முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் பிரதிநிதியான ஒருவரை லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்க முயன்றதோடு, அவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுத்த நரேஷ், தியாகராஜன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய தமிழக அரசியல் சூழலில், இந்தச் சட்டப்பேரவை குதிரை பேர விவகாரம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே தற்பொழுது ஒரு புதிய போர்க்களத்தை உருவாக்கியுள்ளது.

SATHISH R

Recent Posts

“யாரோ பின்னாடி வராங்க…” 4 நாட்களாக தொடர்ந்த தொந்தரவு… இளம் வழக்கறிஞர் எடுத்த முடிவால் கதறும் குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ரகுநாதபாளம் மண்டலம் வி. வெங்கடாயபாலம் கிராமத்தில், செல்போன் மிரட்டல் மற்றும் தொடர் தொல்லைகளால் மனவேதனை…

3 minutes ago

“விஜய் கூப்பிட்டா அரசியலுக்கு போவேன்”….. இன்ஸ்டா ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகரின் அதிரடி பேட்டி….!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்ஸ்டா பிரபலம் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவை தற்போது சமூக…

41 minutes ago

ஜோதிடர் கணிப்பு… ஸ்டாலின் குடும்பத்தில் வெடித்த பூசல்… உதயநிதி கையில் கட்சிப் பொறுப்பா?… துர்கா ஸ்டாலின் போட்ட கண்டிஷன்…..!

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரிடையே கட்சி பொறுப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் நாளிதழ்…

53 minutes ago

திமுகவில் விழுந்த பெரும் அடி…. 35 ஆண்டு கால பவள விழா நிர்வாகி திடீர் ராஜினாமா…. கலக்கத்தில் அறிவாலயம்….. அதிர்ச்சியில் ஸ்டாலின்..!

திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மாநில நிர்வாகி வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். திமுகவின்…

60 minutes ago

BREAKING: மீண்டும் கனமழை…. புயல் சின்னம் உருவானது….. தமிழகத்திற்கு வந்த அலெர்ட்…..!

வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…

1 மணத்தியாலம் ago

கரும்புத் தோட்டத்தில் ஓட ஓட விரட்டி கொலை… கொல்லப்பட்ட ரௌடி மதன் யார்?… நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் போல நுழைந்த திகில் பின்னணி……!

சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…

1 மணத்தியாலம் ago