தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா… ஆளுங்கட்சியை உலுக்கும் குதிரை பேர விவகாரம்…. வெளியான பகீர் தகவல்…!

Spread the love

தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவைத் தொடர்புகொண்டு, அரசுக்கு எதிராகச் செயல்பட ரூ.35 கோடி லஞ்சம் தர முயன்றதாக அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இருப்பதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, சென்னையைச் சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் திருநாவுக்கரசு என்பவர், ‘IPDS’ என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகக் கூறி எம்.எல்.ஏ இளையராஜாவைத் தொடர்புகொண்டுள்ளார். சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தின்போது, தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தியுள்ளார். இதற்குச் சன்மானமாக ரூ.35 கோடி தருவதாக ஆசைவார்த்தை காட்டியதுடன், இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, கடந்த 29.06.2026 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் சட்டப்படியான நடவடிக்கை கோரி புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில், இந்தச் சதித் திட்டத்தில் நேரடியாக ஈடுபட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் திருநாவுக்கரசு, அவருக்குப் பின்னணியாகச் செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூன்று பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இந்த குதிரை பேரத்திற்குப் பின்னால் இருக்கும் முக்கியப் புள்ளிகள் அம்பலமாகியுள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், கைதான நரேஷைச் சென்னையில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் என்பதும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரின் நேரடி அறிவுறுத்தலின் பேரிலேயே திருநாவுக்கரசு தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசியுள்ளார் என்பதும் காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது. ஆளுங்கட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சித் தரப்பில் நடத்தப்பட்ட இந்த ரகசிய சதித் திட்டம் அம்பலமாகியிருப்பது, தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.

SATHISH R

Recent Posts

“யாரோ பின்னாடி வராங்க…” 4 நாட்களாக தொடர்ந்த தொந்தரவு… இளம் வழக்கறிஞர் எடுத்த முடிவால் கதறும் குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ரகுநாதபாளம் மண்டலம் வி. வெங்கடாயபாலம் கிராமத்தில், செல்போன் மிரட்டல் மற்றும் தொடர் தொல்லைகளால் மனவேதனை…

4 minutes ago

“விஜய் கூப்பிட்டா அரசியலுக்கு போவேன்”….. இன்ஸ்டா ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகரின் அதிரடி பேட்டி….!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்ஸ்டா பிரபலம் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவை தற்போது சமூக…

42 minutes ago

ஜோதிடர் கணிப்பு… ஸ்டாலின் குடும்பத்தில் வெடித்த பூசல்… உதயநிதி கையில் கட்சிப் பொறுப்பா?… துர்கா ஸ்டாலின் போட்ட கண்டிஷன்…..!

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரிடையே கட்சி பொறுப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் நாளிதழ்…

54 minutes ago

திமுகவில் விழுந்த பெரும் அடி…. 35 ஆண்டு கால பவள விழா நிர்வாகி திடீர் ராஜினாமா…. கலக்கத்தில் அறிவாலயம்….. அதிர்ச்சியில் ஸ்டாலின்..!

திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மாநில நிர்வாகி வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். திமுகவின்…

1 மணத்தியாலம் ago

BREAKING: மீண்டும் கனமழை…. புயல் சின்னம் உருவானது….. தமிழகத்திற்கு வந்த அலெர்ட்…..!

வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…

1 மணத்தியாலம் ago

கரும்புத் தோட்டத்தில் ஓட ஓட விரட்டி கொலை… கொல்லப்பட்ட ரௌடி மதன் யார்?… நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் போல நுழைந்த திகில் பின்னணி……!

சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…

1 மணத்தியாலம் ago