திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் நேற்று காலை மாரடைப்பால் காலமானார். முன்னதாக, கடந்த ஜூன் 25ஆம் தேதி கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்பு – இயக்குநர் சுந்தர் சி தம்பதியரின் மூத்த மகள் அவந்திகாவின் திருமண விழாவில் அவர் பட்டு வேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். திருமண நிகழ்வு முடிந்த அன்றைய இரவே அவர் கோவாவிலிருந்து சென்னை திரும்பியுள்ளார்.
நேற்று காலை அவர் நடைப்பயிற்சி சென்றிருந்தபோது லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திரை உலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் அவரது மறைவிற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்யராஜின் மறைவுக்கு இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், அந்தப் பதிவை வெளியிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, கோவாவில் நடந்த தனது மகளின் திருமணத்தில் கணவர் சுந்தர் சியுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். பாக்யராஜின் மறைவுக்காக ஒட்டுமொத்தத் திரையுலகமும் துக்கம் அனுசரிக்கும் இந்த நேரத்தில், இதுபோன்ற புகைப்படப் பதிவு தேவையா என்று சமூக வலைத்தளங்களில் குஷ்புவுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…
திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…