Connect with us
Michael Jackson

CINEMA

இறந்த பின்பும் கோடிகளை வாரிக் குவிக்கும் மைக்கேல் ஜாக்சன்.. மூன்வாக் ஸ்டெப்பில் ஒளிந்திருந்த Shoe ரகசியம்..

இன்றும் நாம் ஏதாவது ஒரு நடனம் போட்டாலே இயல்பாகவே நம்மை இவரு பெரிய மைக்கேல் ஜாக்சன் என்று கமெண்ட் அடிப்பார்கள். அந்த அளவிற்கு படித்த, படிக்காத கிட்டத்தட்ட 3 தலைமுறை மக்களின் ஆடல் நாயகனாக ஜொலித்தவர்தான் மைக்கேல் ஜாக்சன். நடிகர் பிரபுதேவா முதல் இன்று நடனம் பயிலும் அனைவருமே மைக்கேல் ஜாக்சனின் பிரதி இல்லாமல் ஆடுவது என்பது மிகவும் கடினமே. தனது ஒவ்வொரு நடன அசைவுகளாலும் உலகத்தையே கட்டிப்போட்டிருந்தார் மைக்கேல் ஜாக்சன்.

#image_title

   

பாப் உலகின் மன்னன், நாடுகளை கடந்த கலைஞன், இசையாலே இதயங்களை கரைத்தவர். மைக்கேல் ஜாக்சன், 1958 ஆண்டு ஆகஸ்ட் 29 நாளில் இந்தியானா மாகாணத்தின் கேரி நகரில் பத்து குழந்தைகள் உள்ள அமெரிக்க ஆப்ரிக்க குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாக பிறந்தார். தனது ஐந்து வயதில் தந்தையின் ‘ஜாக்ஸன் ப்ரதர்ஸ்’ இசைக்குழுவில் மேடை ஏறினாா். சகோதரர்களுடன் இணைந்து உருவாக்கிய ‘ஜாக்ஸன் 5’ இசைக்குழுவில் அனைவராலும் அதிகமாகக் கவனிக்கப்பட்டார்.

“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல” 16 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பூர்ணிமா..! பிரபலங்கள் வாழ்த்து ..!

இனப்போரால் தங்களை அடிமைப்படுத்தி வந்தவர்களை தனது இசையால் அடிமைப்படுத்தினாா் மைக்கேல் ஜாக்ஸன். ‘ஜாக்ஸன் 5’ குழுவில் ஜாக்ஸனின் சகோதரிகளும் இணைந்த பின்னர் அக்குழு ‘தி ஜாக்ஸன்ஸ்’ எனப் பெயர் மாற்றம் பெற்று செயல்படத் தொடங்கியது. பிறகு, நான்கு ஆண்டுகள் கழித்து `ஆஃப் தி வால்’ ஆல்பம் வெளியானது. சிறுவனாக உலகமெங்கும் தனது இசையால் பரவசப்படுத்தி வந்த மைக்கேல் ஜாக்ஸன் அப்போது வாலிபனாகி இருந்தாா். அதில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ஹிட்டடித்தது, அமெரிக்க இசை வரலாற்றில் அதுவே முதல் முறை.

புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நகரக்கூடிய ஷூ ஒன்றை தானே தயாரித்து, அதற்கு காப்புரிமையும் பெற்றார். அதுதான் ஜாக்சனின் ‘மூன் வாக்’ ஸ்டைல் டான்ஸுக்கு உதவியது. இதை அணிந்து கொண்டு முன்பக்கம் சாதாரணமாக வளைவதை விட அதிகமாக வளைய முடிந்தது அவரால். இதனால் தான் ரப்பரை போன்ற வளைக்கிற ஸ்டெப்ஸை ஜாக்சன் போட முடிந்ததாக சொல்வார்கள்.

#image_title

1982 வருடம் வெளிவந்த ஜாக்சனின் த்ரில்லர் வெளிவந்தது. இன்றைக்கும் உலகில் அதிகமாக விற்கும் இசை ஆல்பம். இதன் மூலம் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் அதிக கவனம் பெற்றார். இசை உலகின் மன்னன் என ஜாக்சனை இதற்கு பின் தான் கொண்டாடத் தொடங்கியது உலகம்.சில நடன அசைவுகளை மேற்கொள்ள தனது உடல் எடையைக் குறைப்பதற்காகவும் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டாா். அவை ஏற்படுத்தும் பின்விளைவுகளைக் கட்டுப்படுத்த பல மாத்திரைகளை எடுத்துக்கொண்டாா்.

இறப்பதற்கு முன் ஏவி மெய்யப்ப செட்டியார் செய்த சம்பவம்…AVM STUDIO-ன்னா சும்மாவா?

எய்ட்ஸ் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏராளமான நிதி திரட்டி உள்ளார். தன்னுடைய மேன் ப்ரம் தி சிங்கள் பாடலின் மூலம் வந்த வருமானத்தை ஆதரவற்றோருக்கு தந்ததில் தொடங்கியது இது. கடைசி வரை ஏழை மக்களின் துயரங்களை நினைவு படுத்தும் வகையில் கருப்பு பட்டை ஒன்றை கையில் அணிந்து இருந்தார். ஆப்ரிக்காவின் பகுதிகளுக்கு பயணம் போன பொழுது மக்களோடு ஏகத்துக்கும் அளவளாவி அன்பு காட்டினார்.

#image_title

வெற்றிகரமான இசைப்பயணம், வரலாற்றில் அதிக விற்பனையான ஆல்பம், மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இசைக்கலைஞர் என மைக்கேல் ஜாக்சன் வாங்கியது மொத்தம் 38 கின்னஸ் விருதுகள் உள்ளிட்ட 172 முதன்மை விருதுகள். இதில் 34 விருதுகள் அவர் இறந்த பின்னரும் அறிவிக்கப்பட்டன. சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வில், இறந்த பின்பும் அதிகம் சம்பாதிக்கும் நபர்களில் முதலிடம் வகிக்கிறாராம் மைக்கேல் ஜாக்சன்.

Continue Reading

More in CINEMA

To Top