ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோதே சுருண்டு விழுந்த போலீஸ்.. நெஞ்சை உலுக்கும் CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பு…!

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது காவல் அதிகாரி கிரிஷ் பட், ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் சம்பாவத் மாவட்டத்தின் சிறப்பு அதிரடிப்படை பிரிவில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த கிரிஷ் பட்டிற்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

அவர் ஜிம்மில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது இறப்பிற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து மருத்துவக் குழுவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது, கிரிஷ் பட் ஜிம்மில் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. உடற்தகுதியுடன் இருந்த ஒரு இளம் காவல் அதிகாரி ஜிம்மில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் உருவாக்கியுள்ளது.

Swetha

Recent Posts

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

37 seconds ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

9 minutes ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

19 minutes ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

26 minutes ago

“அய்யோ காப்பாத்துங்க”… திறந்தவெளி வடிகாலில் நழுவி விழுந்த சிறுமி… உயிரைப் பணயம் வைத்து தூக்கிய சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக வடிகால் வாய்க்காலில் நழுவி விழுந்து, மூழ்கும் அபாயத்திற்கு உள்ளானாள். நீச்சல் தெரியாததால் அவள்…

28 minutes ago

BREAKING: மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்… பள்ளிகளில் இனி மாதம்… ஒரு நாள் No Bag Day… அமைச்சர் உத்தரவு…!

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் இனி மாதத்தில் ஒருநாள் 'No Bag Day'…

36 minutes ago